ஐபிஎல் அரங்கில் விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் இடையில் மோதல்…!! மைதானத்தில் பதற்றம்..!! | kohli and gambhir ipl fight 2023

ஐபிஎல் அரங்கில் நேற்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய போட்டியில் பெங்களூரு அணியின் முன்னணி வீரர் விராட் கோலி மற்றும் லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் இடையில் காரசார விவாதம் ஏற்பட்டது மைதானத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி துவக்க வீரர்கள் விராட் கோலி 31(30) மற்றும் டு பிளெசிஸ் 44 (40) சிறப்பான தொடக்கத்தை அளித்து ரன்கள் குவித்தார்கள். அதன்பின் இருவரும் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் 129 ரன்கள் பதிவு செய்தனர்.
பெங்களூர் அணி அளித்த இலக்கை எளிதில் லக்னோ அணி அடைந்து வெற்றி அடைவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பவுலர்கள் லக்னோ அணி வீரர்கள் விக்கெட்டை உடனுக்குடன் பெற்று போட்டியின் போக்கையே மாற்றினார்கள். இந்நிலையில் லக்னோ அணி வெறும் 108 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
அதன்பின் போட்டி முடிந்த பிறகு லக்னோ அணி வீரர் கைல் மேயர்ஸ் பெங்களூர் அணி வீரர் விராட் கோலி இடம் உரையாடலில் ஈடுபட்ட போது, லக்னோ அணி ஆலோசகர் கம்பீர் கோலி இடம் பேசிக்கொண்டிருந்த மேயர்ஸ் தடுத்து நிறுத்தி அழைத்து சென்றார். அதன்பின் கோலி மற்றும் கம்பீர் நடுவில் சற்று கோபமாக வார்த்தைகள் பரிமாற பட்டதை பார்க்க முடிந்தது, இறுதியாக இரு அணியின் வீரர்களும் இருவரையும் தடுத்து விலகி செல்ல வைத்தனர்.
இந்த சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் ஒரு மிகப்பெரிய பேசு பொருளாக உருவாகியுள்ளது, மேலும் கிரிக்கெட் உலகில் முன்னணி இடத்தில் இருப்பவர்கள் ஆகிய விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் உடைய இந்த செயல்பாடுகள் மோசமான நிகழ்வாக பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.