பஞ்சாப் கிங்ஸ் பவுலர்களை பந்தாடிய விராட் கோலி மற்றும் டு பிளெசிஸ் ஜோடி.!! | kohli and du plessis stunning batting vs pbks 2023

ஐபிஎல் 2023 ஆம் அரங்கில் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி துவக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் பாப் டு பிளெசிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரங்கை அதிர வைத்தார்கள்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் சாம் கர்ரன் பவுலிங் செய்ய முடிவு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூரு அணி முன்னணி வீரர்கள் விராட் கோலி மற்றும் பாப் டு பிளெசிஸ் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி பஞ்சாப் பவுலர்களை பந்தாடிகள் என்று கூறினால் மிகையில்லை.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டனாக இந்த போட்டியில் நீண்ட நாட்களுக்கு பிறகு விராட் கோலி களமிறங்கி உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள். இந்நிலையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 40 பந்துகளில் அரைசதம் கடந்து ஐபிஎல் அரங்கில் தனது 48 வது அரை சதத்தை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி 1 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகள் உட்பட 47 பந்துகளில் 59 ரன்கள் பதிவு செய்து பெவிலியன் திரும்பினார். அதேபோல் போட்டியின் தொடக்கத்தில் இருந்து மறுமுனையில் அதிரடியாக விளையாடிய பாப் டு பிளெசிஸ் 5 சிக்ஸர் 5 பவுண்டரி உட்பட 56 பந்துகளில் 84 ரன்கள் பதிவு செய்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ஐபிஎல் 2023 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் துவக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் பாப் டு பிளெசிஸ் ஜோடி எதிரணி பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார்கள் என்று கூறினால் மிகையில்லை. மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 174 ரன்கள் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.