கே.எல்.ராகுல் மற்றும் அதியா ஷெட்டி திருமணம் இனிதே நடந்தது..! ரசிகர்கள் வாழ்த்து..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 24, 2023 & 09:58 [IST]

Share

இந்திய அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டியை இருவரும் நேற்று காதல் வாழ்க்கையில் இருந்து திருமண வாழ்க்கையில் நுழைந்தார்கள்.

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் சில வருடங்களாக  கே.எல்.ராகுல் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டியை காதலித்து வந்தார், இதனை அடுத்து வாழ்க்கையில்  இல்லற வாழ்க்கையில் கணவன் மனைவியாக இணைய நினைத்த இருவரும் (23.01.2023) நேற்று சுனில் ஷெட்டியின் கண்டாலா பண்ணை வீட்டில் குறிப்பிட்ட முக்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் திருமணம் செய்து கொண்டார்கள்.

அதன்பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்த மணப்பெண்ணின்  தந்தை சுனில் ஷெட்டி திருமணம் முடிந்தது என்று  உறுதி படுத்தி அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.

அடுத்து புதுமண தம்பதியர்கள் இருவரும் பத்திரிக்கையாளர்களுக்கு ஒன்றாக திருமண உடையில் புகைப்படம் எடுக்க வாய்ப்பளித்து உலகிற்கு தங்கள் திருமணத்தை உறுதி படுத்தினார்கள்.   

இந்நிலையில் கே.எல்.ராகுல் மற்றும் அதியா ஷெட்டி இருவருக்கும் திருமண வாழ்த்துக்களை கிரிக்கெட் ரசிகர்கள் உட்பட பலர் இணையத்தில் தெரிவித்து வருகிறார்கள், அடுத்தாக ஐபிஎல் தொடருக்கு பின்னர் மிகப்பெரிய அளவில் ஒரு வரவேற்பு நிகழ்வு நடத்தப்பட உள்ளதாக திருமண தம்பதியினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளது.