IND VS AUS TEST 2023 : 3வது டெஸ்ட் போட்டியில் யாருக்கு வாய்ப்பு..?? கே.எல்.ராகுல் மற்றும் சுப்மன் கில் இடையில் கடும் போட்டி..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில், 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் இடத்திற்கு கே.எல். ராகுல் மற்றும் சுப்மன் கில் இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் மோசமான பார்மில் உள்ளார், எனவே அவர் மீது பல விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தது. இந்திய அணி முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று 2-0 என்ற நிலையில் தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்த இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து சொதப்பி வருகிறார்.
இந்நிலையில் இந்திய அணி சார்பில் கே.எல்.ராகுல் இடத்தில் சுப்மன் கில் விளையாடுவார் என்று பலரும் எதிர்பார்க்கும் நிலையில், பிசிசிஐ சார்பில் ஒரு காணொளி வெளியானது இதில் இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருவதை காண முடிந்தது, எனவே கில் 3 வது டெஸ்ட் போட்டியில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன்பின் அதே காணொளியில் கே.எல்.ராகுல் வந்து கில் உடன் இணைத்து தீவிரமாக நீண்ட நேரம் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார், இதனால் இந்திய ரசிகர்கள் 3வது டெஸ்ட் போட்டியில் ராகுல் மற்றும் கில் இருவரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று மேலும் குழப்பத்தில் ஆழ்ந்த்துள்ளார்கள்.இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா கே.எல்.ராகுலை தொடர்ந்து ஆதரித்து வருவதால் ராகுலுக்கும் மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 3வது டெஸ்ட் போட்டியில் மார்ச் 1ஆம் தேதி முதல் இந்தோரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் விளையாட உள்ளார்கள். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும் அதே சமயத்தில் ஆஸ்திரேலியா அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்ய போராடும் என்பதால் 3வது டெஸ்ட் போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.