ஹைதராபாத் அணிக்கு ஈடு கொடுக்க முடியாத கொல்கத்தா அணி..! எத்தனை ரன் வித்தியாசத்தில் வெற்றி தெரியுமா.? | KKR vs SRH IPL 2023

இந்த 2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டியில் இன்று விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் கொல்கத்தா vs ஹைதராபாத் அணிக்கான போட்டியின் வெற்றி யாருக்கு என்பதை இதில் காணலாம். இன்றைய போட்டியானது கொல்கத்தாவில் நடைபெற உள்ளதால், கொல்கத்தா அணி இந்த வாய்ப்பைத் தவறாது பயன்படுத்தி வெற்றியைத் தழுவும் என கொல்கத்தா அணி ரசிகர்கள் நம்பிக்கை வைத்தனர்.
அதே சமயம், கொல்கத்தா அணிக்கு டஃப் கொடுக்கும் விதமாக ஹைதராபாத் அணி வீரரான ஹரி புரூக், ஐபிஎல் 2023 போட்டியிலேயே முதல் சதம் அடித்து சாதனையைப் படைத்தார். மேலும், ஹைதராபாத் அணி அனைத்து ஓவரில், 228 ரன்களை 4 விக்கெட்டுகளுடன் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, ஆடிய கொல்கத்தா அணி 229 ரன்களை எடுக்க தனது அனைத்து முயற்சிகளையும் கொண்டு விளையாடி வந்தனர்.
கொல்கத்தா அணி வீரரான 27 பந்துகளில் அரை சதம் அடித்து விளாசினார். இருப்பினும், கடைசி 1 பந்தில் 25 ரன்களை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால், 20 ஓவரில் 205 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. இதனால், 23 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி கொல்கத்தா அணியை வென்றது. இன்றைய போட்டியில், மேன் ஆஃப் தி மேட்ச் விருது ஹரி புரூக்கிற்கு கிடைக்கும் என்றே கூறப்படுகிறது.