ஹரி ப்ரூக்கின் சதத்தால் அதிரடியான ரன்களை இலக்காக வைத்த ஹைதராபாத் அணி.!? | SRH vs KKR IPL 2023

2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் 2023 போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இன்றைய போட்டியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியானது, கொல்கத்தாவில் உள்ள எடென் கார்டென்ஸ்-ல் நடைபெறுகிறது.
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில், ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கைத் தொடங்கியது. ஹைதராபாத் அணி வீரரான ஹாரி புரூக் 55 பந்துகளில் 100 ரன்களை அடித்து சாதனை படைத்துள்ளார். இவரின் அதிரடியான ஆட்டத்தால் ஐபிஎல் 2023 போட்டியில் முதல் சதத்தை அடித்த பெருமை ஹைதராபாத் அணியையே சேரும்.
மேலும், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 228 ரன்களை அடித்து 4 விக்கெட்டுகளைக் கொண்டுள்ளது. அதன் படி, கொல்கத்தா அணிக்கு 229 ரன்களை இலக்காக வைத்துள்ளது. ஹைதராபாத்தின் இந்த அதிரடியான ஆட்டத்திற்கு, கொல்கத்தா அணியின் பதிலடி என்னவாக இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.