கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையிலான போட்டியின் முழு அப்டேட்..!! | kkr vs srh 2023 preview
![கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையிலான போட்டியின் முழு அப்டேட்..!! | kkr vs srh 2023 preview](https://www.sportspartans.com/assets/uploads/news-2091.jpg)
ஐபிஎல் 2023 ஆம் தொடரில் இடம்பெற்றுள்ள அணிகள் புள்ளி பட்டியலில் முன்னேற அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை பெற்று அசத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்த களமிறங்க உள்ளார்கள்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொறுத்தவரை கடைசியாக விளையாடிய போட்டிகளில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ந்து வெற்றிகளை பதிவு செய்து வருகிறார்கள். அதே சமயத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடைசியாக விளையாடிய போட்டியில் தான் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார்கள்.
போட்டி குறித்த விவரம் :
20 வது லீக் போட்டி : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
நேரம் & நாள் : 7:30 p.m & வெள்ளிக்கிழமை
தேதி : 14 ஏப்ரல் 2023
மைதானம் : ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & ஜியோ சினிமா
ட்ரீம் லெவன் டீம் கணிப்பு :
கேப்டன் - சுனில் நரைன்
துணை கேப்டன் - ஐடன் மார்க்ராம்
விக்கெட் கீப்பர் - ரஹ்மானுல்லா குர்பாஸ்
பேட்ஸ்மேன்கள்- ரிங்கு சிங், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா
ஆல்-ரவுண்டர்கள் - வாஷிங்டன் சுந்தர், ரஸ்ஸல்
பந்துவீச்சாளர்கள் - மயங்க் மார்கண்டே, வருண் சக்கரவர்த்தி, மார்கோ ஜான்சன்
பிட்ச் அறிக்கை :
இந்த போட்டி நடைபெற உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் உள்ள பிட்ச் ஒரு சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்த உதவ கூடிய தன்மை கொண்டதாகும், எனவே பேட்ஸ்மேன்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக ரன்கள் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் இந்த பிட்ச் ஸ்பின்னர்கள் அசத்தல் பவுலிங்கை வெளிப்படுத்த உதவும் என்று தெரிய வந்துள்ளது.
வெற்றி கணிப்பு :
ஐபிஎல் 2023 ஆம் அரங்கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புதிய கேப்டன் நிதிஷ் ராணா தலைமையில் களமிறங்கி விளையாடி வருகிறது, கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகள் பெற்று அணைத்து அணிகளுக்கும் தனது நிலையை உணர்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் புதிய கேப்டன் ஐடென் மார்க்கரம் தலைமையில் தான் களமிறங்கி விளையாடி வருகிறது, இந்த தொடரில் முதல் வெற்றியை நீண்ட போராட்டத்திற்கு பிறகு தான் ஹைதெராபாத் அணி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இரு அணிகளும் கடைசியாக விளையாடிய போட்டிகளில் வெற்றியை பெற்றுள்ளதால் தனது வெற்றி பயணத்தை தொடர முழுவீச்சில் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் இந்த போட்டி கொல்கத்தா அணியின் ஹோம் கிரவுண்ட் ஆன ஈடன் கார்டனில் நடைபெறுவதால் வெற்றி வாய்ப்பு மிரட்டல் பார்மில் உள்ள கொல்கத்தா அணிக்கு தான் அதிகமாக உள்ளது என்று தெரிய வந்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான ) : ரஹ்மானுல்லா குர்பாஸ்(வி.கீ), என் ஜெகதீசன், நிதிஷ் ராணா(கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், சுயாஷ் சர்மா, வருண் சக்கரவர்த்தி, லாக்கி பெர்குசன், உமேஷ் யாதவ்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் லெவன் (தோராயமான ) : ஹாரி புரூக், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ராம்(கேப்டன்), ஹென்ரிச் கிளாசென்(வி.கீ), வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக், நடராஜன்.