கொல்கத்தா அணியை வீழ்த்திய ராஜஸ்தான் அணி…! எத்தனை ரன்களில் தெரியுமா..? | KKR vs RR IPL 2023

இந்திய மண்ணில் 2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் 56 ஆவது போட்டியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியானது கொல்கத்தாவில் உள்ள எடென் கார்டென்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அணி முதலில் பௌலிங்கைத் தேர்வு செய்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையே நடந்த இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பௌலிங்கைத் தேர்வு செய்தது. இதில், முதலில் பேட்டிங்க் செய்த கொல்கத்தா அணியில் ஜேசன் ராய் 8 பந்துகளுக்கு 10 ரன்கள் அடித்திருந்தார். குர்பேஸ் 12 பந்துகளுக்கு 18 ரன்கள் எடுத்தார். அதிகபட்ச பந்துகளாக வெங்கடேஷ் ஐயர் 42 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து அருமையாக விளையாடினார். இதனைத் தொடர்ந்து, ரஸ்ஸல் 10 ரன்கள் மற்றும் ரிங்கு சிங் 16 ரன்கள் எடுத்திருந்தனர். இவ்வாறு 20 ஒவரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவரில் 149 ரன்களுடன் 8 விக்கெட்டுகளைக் கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, ராஜஸ்தான் அணிக்கு 150 ரன்களை இலக்கு வைத்தது.
அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி தனது அதிரடி ஆட்டத்தை ஆடியது. இந்த அணியில் ஜெய்ஸ்வால் 47 பந்துகளுக்கு 98 ரன்கள் எடுத்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும், ஜோஸ் பட்லர் 3 பந்துகளில் ரஸ்ஸலின் பௌலிங்கால் ரன் அவுட் எடுத்து ஆட்டமிழந்தார். மேலும், சஞ்சு சாம்சன் 29 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து சூப்பரான ஆட்டத்தை ஆடினார். இதில், ராஜஸ்தான் அணி 13.1 ஓவரிலேயே 151 ரன்கள் அடித்து சாதனை படைத்தனர். மேலும், இந்த ஆட்டத்தின் பிளேயர் ஆஃப் தி மேட்ச் ஆக, ஜெய்ஸ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.