கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் அப்டேட்..!! | kkr vs rcb live score today

ஐபிஎல் 2023 தொடரில் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அந்த வரிசையில் அடுத்த அதிரடி போட்டியாக இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் போட்டி இடம்பெறும் என்பதில் ஐயமில்லை.இந்த போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் குறித்த விவரங்கள் வெளியானது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொறுத்தவரை ஐபிஎல் 2023 தொடரை தோல்வியுடன் ஆரம்பித்துள்ளது, அதே சமயத்தில் ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், நிதிஷ் ராணா போன்ற மிகவும் திறன் வாய்ந்த முன்னணி வீரர்கள் கொண்டுள்ள அணியாக கொல்கத்தா அணி உள்ள நிலையில் பெங்களூரு அணிக்கு எதிராக கட்டாயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பொறுத்தவரை ஐபிஎல் 2023 தொடரை மிகவும் அதிரடியாக ஆரம்பித்துள்ளது, மேலும் விராட் கோலி, டூ பிளெசிஸ், கிளென் மேக்ஸ்வெல் போன்ற மிரட்டல் வீரர்கள் கொண்ட அணியாக உள்ளது. இந்நிலையில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் போட்டி மிகவும் அதிரடியான போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டூ பிளெசிஸ் பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்ய கொல்கத்தா அணி களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் கட்டாயம் இரு அணிகள் சார்பில் அதிரடி அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன் : மந்தீப் சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ்(வி.கீ ), நிதிஷ் ராணா(கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஷர்துல் தாக்கூர், சுனில் நரைன், சுயாஷ் சர்மா, டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பிளேயிங் லெவன் : விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ்(கேப்டன்), தினேஷ் கார்த்திக(வி.கீ ), கிளென் மேக்ஸ்வெல், மைக்கேல் பிரேஸ்வெல், ஷாபாஸ் அகமது, டேவிட் வில்லி, கர்ண் சர்மா, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.