கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மிரட்டல் ஆட்டம்..!! பெங்களூரு அணியை பந்தாடியது…!! | kkr vs rcb live score today

ஐபிஎல் 2023 ஆம் தொடரில் 9 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிரட்டல் பேட்டிங்கை வெளிப்படுத்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பவுலர்களை துவம்சம் செய்தார்கள் என்று கூறினால் மிகையில்லை.
இந்த போட்டியில் முதலில் செய்ய களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி துவக்க வீரர்கள் விக்கெட்டை பெங்களூரு அணி பவுலர் டேவிட் வில்லி சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி கைப்பற்றினர்.அதன்பின் கொல்கத்தா அணியின் நிலையை சரி செய்யும் வகையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 57(44) அரைசதம் பதிவு செய்து கார்ன் ஷர்மா பவுலிங்கில் ஆட்டமிழந்தார்.
இதனை அடுத்து மீண்டும் அசத்தல் பவுலிங்கை வெளிப்படுத்தி பெங்களூரு பவுலர்கள் கொல்கத்தா அணியின் முன்னணி வீரர்கள் நிதிஷ் ராணா1(5), ஆண்ட்ரே ரசல் 0(1) விக்கெட்டுகளை கைப்பற்றி வேகமாக பெவிலியன் திருப்பினார்கள், எனவே போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கட்டுப்பாட்டிற்கு வந்தது என்று அனைவரும் நினைத்த வேளையில் கொல்கத்தா அணி வீரர் ஷர்துல் தாகூர் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐபிஎல் அரங்கை அதிர வைத்தார்.
அதாவது கொல்கத்தா அணியின் முன்னணி வீரர்கள் விக்கெட் இழந்த பிறகு, அணியின் நிலையை சரி செய்யும் வகையில் ஜோடி சேர்ந்த ரிங்கு சிங் மற்றும் ஷர்துல் தாகூர் பெங்களூரு பவுலர்களை நாலா பக்கமும் சிதறடித்தார்கள், குறிப்பாக ஷர்துல் தாகூர் 20 பந்துகளில் அரைசதம் பதிவு செய்து பெங்களூரு அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.அதோடு நில்லாமல் இளம் வீரர் ரிங்கு சிங் தனது பங்கிற்கு அதிரடியை தொடர்ந்த நிலையில் 46(33) ரன்கள் பதிவு செய்து அசத்தினார்.
கொல்கத்தா அணிக்காக ஷர்துல் மற்றும் ரிங்கு ஜோடி சேர்ந்து 100 ரன்கள் பதிவு செய்தார்கள், குறிப்பாக ஷர்துல் தாகூர் 68 (29) ரன்கள் பதிவு செய்து அசத்தினார். இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 204 ரன்கள் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.