கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டி குறித்த முழு அப்டேட்..!!

உலகின் முக்கிய டி20 தொடர்களில் ஒன்றாக விளங்கும் ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் மிகவும் அதிரடியாக நடைபெற்று வரும் நிலையில், இந்த தொடரில் அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாட உள்ளார்கள். இந்த போட்டிக்கான பிளேயிங் லெவன், பிட்ச் அறிக்கை மற்றும் வெற்றி கணிப்புகள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை காண்போம்.
ஐபிஎல் 2023 அரங்கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புதிய கேப்டன் நிதிஷ் ராணா தலைமையில் களமிறங்கி உள்ளது. மேலும் இந்த தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளதால் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து மீண்டு வெற்றி பெற முயற்சிக்கும் என்று தெரிய வந்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பொறுத்தவரை கேப்டன் பாப் டு ப்ளேசிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி மிரட்டல் அணியாக வலம் வருகிறது. இந்நிலையில் கட்டாயம் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று ஐபிஎல் 2023 ஆம் தொடரின் வெற்றி பயணத்தை தொடர முழுவீச்சில் செயல்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
போட்டி குறித்த விவரம் :
9 வது லீக் போட்டி : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.
நேரம் & நாள் : 7:30 p.m & வியாழக்கிழமை
தேதி : 6 ஏப்ரல் 2023
மைதானம் : ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா.
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & ஜியோ சினிமா.
வெற்றி கணிப்பு :
ஐபிஎல் 2023 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் போட்டியில் மிகவும் மோசமான தோல்வியை தழுவி உள்ள நிலையில், இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் முழுவீச்சில் செயல்படுவார்கள் என்று தெரிய வந்துள்ளது. அதே சமயத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐபிஎல் தொடரில் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியை கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலும் தொடர முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் போட்டியில் வெற்றி வாய்ப்பு பெங்களூரு அணிக்கு தான் அதிகமாக உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிட்ச் அறிக்கை :
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானம் அதிரடி பேட்டிங்குக்கு பேர் போன மைதானம் ஆகும், மேலும் இந்த பிட்சில் ஸ்பின்னர்கள் சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்த வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் போட்டியில் கண்டிப்பாக அதிக ரன்கள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரீம் லெவன் டீம் கணிப்பு :
கேப்டன் : ஃபாஃப் டு பிளெசிஸ்
துணை கேப்டன் : விராட் கோலி
பேட்ஸ்மேன்கள் : கிளென் மேக்ஸ்வெல், நிதிஷ் ராணா, ரிங்கு சிங்,
ஆல்ரவுண்டர்கள் : மைக்கேல் பிரேஸ்வெல், ஆண்ட்ரே ரஸ்ஸல்
விக்கெட் கீப்பர் : ரஹ்மானுல்லா குர்பாஸ்
பவுலர்கள் : வருண் சக்கரவர்த்தி, கர்ண் சர்மா, முகமது சிராஜ்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன்(தோராயமான ) : ரஹ்மானுல்லா குர்பாஸ்(வி.கீ), மன்தீப் சிங், நிதிஷ் ராணா(கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஷர்துல் தாக்கூர், சுனில் நரைன், டிம் சவுத்தி, அனுகுல் ராய், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பிளேயிங் லெவன்(தோராயமான ) : ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், மைக்கேல் பிரேஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (வி.கீ), டேவிட் வில்லி, ஹர்ஷல் பட்டேல், ஆகாஷ் தீப், கர்ண் சர்மா, முகமது சிராஜ்.