கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் அப்டேட்..!! | kkr vs gt 2023 toss update

ஐபிஎல் 2023 அரங்கில் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஈடன் கார்டன் மைதானத்தில் வெற்றிக்கான தேடலில் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள், இந்த மிரட்டல் போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் போன்ற முக்கிய விவரங்கள் வெளியானது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பு தொடரில் புதிய கேப்டன் நிதிஷ் ராணா தலைமையில் முதல் சில போட்டிகளில் வெற்றி பெற்ற பிறகு தொடர்ச்சியாக தோல்விகள் தான் பெற்றது. அதன்பின் கடைசியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் தனது வெற்றி பயணத்தை தொடர்ந்துள்ளது.
அதே சமயத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் நடப்பு ஐபிஎல் தொடரில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் உள்ளது, குறிப்பாக கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி வெற்றி பெற்று சிறந்த பார்மில் உள்ளது.
இந்நிலையில் இரு அணிகள் சார்பில் இந்த போட்டியில் வெற்றி பெற ஒரு அதிரடி ஆட்டம் அரங்கேறும் என்று கூறினால் மிகையில்லை, தற்போது இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் செய்ய முடிவு செய்த நிலையில் முதலில் பேட்டிங் செய்ய நிதிஷ் ராணா தலைமையில் ஆன கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்க உள்ளது.
ஐபிஎல் 2023 தொடரில் முன்னதாக குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய போட்டியில் கொல்கத்தா அணி வீரர் ரிங்கு சிங் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி குஜராத் அணியிடம் இருந்து வெற்றியை பறித்து சென்றார். இந்நிலையில் குஜராத் அணி சார்பில் இந்த தோல்விக்கு இன்றைய போட்டியில் பதிலடி கொடுக்க படுமா…?? என்று பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன் : என் ஜெகதீசன், ரஹ்மானுல்லா குர்பாஸ்(வி.கீ), வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா(கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், டேவிட் வைஸ், ஷர்துல் தாக்கூர், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.
குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன் : விருத்திமான் சாஹா(வி.கீ), அபினவ் மனோகர், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், நூர் அகமது, முகமது ஷமி, மோகித் சர்மா, ஜோசுவா லிட்டில்.