கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மிரட்டல் வெற்றி…!! சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போராடி தோல்வி..!! | kkr victory against srh 2023

ஐபிஎல் 2023 தொடரில் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதினார்கள், இறுதி ஓவர் வரை பரபரப்பாக சென்ற போட்டியில் நிதிஷ் ராணா தலைமையில் ஆன கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் நிதிஷ் ராணா பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் வீரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் 0(1), ஜேசன் ராய் 20(19), வெங்கடேஷ் ஐயர் 7(4) ஆகியோர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் உடனுக்குடன் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்கள்.
அதன்பின் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா 42(31) மற்றும் இளம் வீரர் ரிங்கு சிங் 46(35) இருவரும் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடிய நிலையில் கொல்கத்தா அணி ஒரு நல்ல இலக்கை அடைய முடிந்தது, குறிப்பாக 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் பதிவு செய்தது.ஹைதராபாத் அணி சார்பில் சிறப்பான பவுலிங் செய்த நடராஜன் மற்றும் மார்கோ ஜான்சன் தலா 2 விக்கெட்டுகளை பெற்றனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்ய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் வேகமாக ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்கள். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் ஐடன் மார்க்ராம் நிதானமாக பொறுப்புடன் விளையாடிய 41(40) ரன்கள் பெற்று ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் ஹைதராபாத் அணியின் கடைசி நம்பிக்கையாக போராடி வந்த ஹென்ரிச் கிளாசென் 36(20) விக்கெட்டை கொல்கத்தா அணி வீரர் ஷர்துல் தாக்கூர் கைப்பற்றிய நிலையில் கொல்கத்தா அணியின் வெற்றி உறுதியானது.
இறுதி ஓவர் வரை ஹைதராபாத் அணி போராடியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பவுலர் வருண் சக்கரவர்த்தி உடைய பவுலிங்கை சமாளிக்க முடியாமல் திணறினார்கள்.
குறிப்பாக இந்த போட்டியில் இறுதி ஓவரை அசத்தலாக வீசிய வருண் சக்கரவர்த்தி அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.