ஐபிஎல் 2023 : கொல்கத்தா அணியில் ஸ்ரேயஸ் ஐயர் இடத்தை நிரப்ப வாய்ப்பு உள்ள வீரர்கள்..!!

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ஷ்ரேயஸ் ஐயர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், கொல்கத்தா அணியின் அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட்ட வாய்ப்புள்ள முன்னணி வீரர்கள் பற்றி காண்போம்.
ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் வரும் மார்ச் 31 ஆம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளது. இந்த தொடரில் 2 முறை சாம்பியன் பட்டங்கள் வென்று அசத்தி முக்கிய அணியாக விளங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ளது.
அதாவது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதுகு பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக மருத்துவர்கள் அறிவுறுத்தலின் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இதனால் 2 - 3 மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டியதாக தகவல் வெளியான நிலையில் கொல்கத்தா அணி புதிய கேப்டனை அறிவிக்க வேண்டிய நிலையில் உள்ளது.
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அடுத்த கேப்டனாக வாய்ப்புள்ள வீரர்கள் :
1) சுனில் நரேன்
2) ஷர்துல் தாக்கூர்
3) ஷகிப் அல் ஹசன்
சுனில் நரேன் :
ஐபிஎல் தொடரில் 2012 ஆம் ஆண்டு முதல் முக்கிய வீரராக திகழ்ந்து வரும் சுனில் நரேன், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சிறந்த ஸ்பின்னராக செயல்பட்டு வருகிறார்கள்,மேலும் பேட்டிங்கிலும் அசத்தி அணிக்கு பல போட்டிகளில் வெற்றியை பெற்று தந்த அனுபவ வீரர் என்று கூறினால் மிகையில்லை.
அதே சமயத்தில் உலகளவில் பல்வேறு டி20 தொடர்களில் விளையாடி உள்ள சுனில் நரேன் அபுதாபி நைட் ரைடர்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு அடுத்த கேப்டனாக வர வாய்ப்புள்ளது.
ஷர்துல் தாக்கூர் :
இந்திய அணியின் முன்னணி வீரர் ஷர்துல் தாக்கூர் சிறந்த ஆல்ரவுண்டராக முன்னேறி வருகிறார், தற்போது கொல்கத்தா அணியில் இடம்பெற்று உள்ள நிலையில் அடுத்த கேப்டனாக முன்னேற வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் கொல்கத்தா அணியில் இருந்து பேட் கம்மின்ஸ் விலகியுள்ள நிலையில் அந்த இடத்தில் ஷர்துல் தாக்கூர் சிறப்பாக செயல்படுவார் எதிர்பார்க்கப்படுகிறது.
ஷகிப் அல் ஹசன் :
வங்கதேச அணியின் முன்னணி வீரராக விளங்கும் ஷகிப் அல் ஹசன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ள நிலையில், அணியின் அடுத்த கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் இடத்தை நிரப்ப பெரிய அளவில் வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடர் மிக விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில் , அதற்கு முன் கொல்கத்தா அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க வாய்ப்புள்ளது.ஐபிஎல் 2023 ஆம் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் போட்டியில் ஏப்ரல் ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.