கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிறந்த பிளேயிங் லெவன் குறித்த அப்டேட்..!! | kkr playing 11 2023

ஐபிஎல் 2023 ஆம் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக தற்காலிகமாக தொடரில் இருந்து விலகி உள்ள நிலையில், புதிய கேப்டனாக நிதிஷ் ராணா தலைமையில் தொடரில் பங்கேற்க உள்ள கொல்கத்தா அணியின் சிறந்த பிளேயிங் லெவன் குறித்து காண்போம்.
இந்தியாவின் முக்கிய தொடராக விளங்கும் ஐபிஎல் தொடரில் 2 முறை சாம்பியன் பட்டங்களை வென்று முக்கிய அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விரைவில் நடைபெற உள்ள 2023 ஆம் ஆண்டு தொடரில் புதிய கேப்டன் நிதிஷ் ராணா தலைமையில் களமிறங்க உள்ளது. இந்த தொடரில் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதல் பாதி போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
2023 ஆம் ஐபிஎல் தொடரில் வெற்றிகளை பெற மிகவும் பலமான பிளேயிங் லெவன் உடன் அணி களமிறங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, இந்நிலையில் அணியின் துவக்க வீரர்கள் இடத்தில் வெங்கடேஷ் ஐயர் உடன் களமிறங்க வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் அல்லது ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து அணியின் அணியின் மிடில் ஆர்டர் பலப்படுத்த முழுமையாக அணி நம்பியுள்ள அதிரடி ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரசல் தான் என்று கூறினால் மிகையில்லை, அவரோடு சேர்ந்து கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிதிஷ் ராணா மற்றும் இளம் வீரர் ரிங்கு சிங் உதவுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அடுத்ததாக அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் சிறப்பான பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் கலக்கும் வகையில் சுனில் நரேன் மற்றும் ஷர்டுல் தாகூர் அணியின் முக்கிய வீரராக ப்ளேயிங் லெவனில் இடம் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா அணி சிறப்பான வேகப்பந்து பவுலிங் யூனிட்டை கொண்டுள்ளது, குறிப்பாக டிம் சவுதீ,உமேஷ் யாதவ் எதிரணி வீரர்களை துவம்சம் செய்வார்கள் என்பதில் ஐயமில்லை. அதேபோல் ஸ்பின் பவுலிங்கில் வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரைன் அணிக்கு உதவுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொறுத்தவரை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இடம் பெறாத நிலையில் மிக சிறந்த அதிரடி பிளேயிங் லெவன் உடன் ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐபிஎல் 2023 ஆம் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி தனது முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியோடு மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிறந்த பிளேயிங் லெவன் : வெங்கடேஷ் ஐயர், லிட்டன் தாஸ்/ரஹ்மானுல்லா குர்பாஸ், நிதிஷ் ராணா(கேப்டன்), ஆண்ட்ரே ரஸ்ஸல், ரிங்கு சிங், நாராயண் ஜெகதீசன்(வி.கீ), ஷர்துல் தாக்கூர், சுனில் நரைன், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, வருண் சக்கரவர்த்தி.