கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் அதிரடியில் சின்னச்சாமி மைதானம் அதிர்ந்தது..!! பெங்களூரு நிதான ஆட்டம்..!! | kkr stunning batting vs rcb 2023 match

ஐபிஎல் 2023 தொடரில் இன்றைய போட்டியில் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் அதிரடி ஆட்டத்தை அரங்கேற்றினார்கள், குறிப்பாக முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்ஸ்மேன்கள் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி அரங்கை அதிர வைத்தார்கள்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தற்காலிக கேப்டன் விராட் கோலி பவுலிங் செய்ய முடிவு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணியின் துவக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் ஜெகதீசன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரங்கை அதிர வைத்தார்கள்.
பெங்களூரு அணி பவுலர்களை சிதறடித்த கொல்கத்தா அணி துவக்க வீரர்கள் ராய் மற்றும் ஜெகதீசன் இணைந்து பவர் பிளே முடிவில் 66 ரன்கள் பதிவு செய்தனர் .கொல்கத்தா அணி சார்பில் தொடர்ந்து அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேசன் ராய் 29 பந்துகளில் 56 ரன்கள் பதிவு செய்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
கொல்கத்தா அணி அதிரடி ஆட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் தொடக்க வீரர்கள் ராய் மற்றும் ஜெகதீசன் விக்கெட்களை பெற்று அசத்தினார் பெங்களூர் அணி வேகப்பந்து பவுலர் விஜயகுமார் வைஷாக் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் ஜோடி சேர்ந்து விளையாடிய கொல்கத்தா அணி முன்னணி வீரர்கள் வெங்கடேஷ் ஐயர், மற்றும் நிதிஷ் ராணா பொறுப்புடன் விளையாடினார்கள்.
அதன்பின் அதிரடியை தொடர்ந்த கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணா 21 பந்துகளில் 48 ரன்கள் பதிவு செய்து பெவிலியன் திரும்பினார். அவரை தொடர்ந்து வெங்கடேஷ் ஐயர் 31(26) ரன்களில் வனிந்து ஹசரங்கா ஓவரில் ஆட்டமிழந்தார். பெங்களூர் அணி சார்பில் முன்னணி பவுலர் ஹசரங்கா ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை பெற்றார்.
இறுதியாக கொல்கத்தா அணியின் மிரட்டல் வீரர் ரிங்கு சிங் மற்றும் டேவிட் வைஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 200 ரன்களை பதிவு செய்தது. இந்நிலையில் பெங்களூரு அணி கொல்கத்தா அணியின் ஆட்டத்திற்கு பதிலடி கொடுத்து ஹோம் கிரௌண்டில் வெற்றியை பெறுமா ..?? என்று பொறுத்திருந்து காண்போம்.