ரிங்கு சிங் சிக்ஸர் மழை பொழிந்தார் ..!! இறுதி ஓவரில் மிரட்டல் வெற்றி..!! | rinku singh kkr 2023

ஐபிஎல் அரங்கில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய போட்டியில் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு அசத்தல் வெற்றியை பெற்று தந்தார் கொல்கத்தா இளம் வீரர் ரிங்கு சிங், ஐபிஎல் 2023 ஆம் தொடரில் ஒரு முக்கிய விறுவிறுப்பான போட்டியாக இந்த போட்டி பதிவானது.
ஐபிஎல் 2023 தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 204 ரன்கள் பதிவு பதிவு செய்தது, குறிப்பாக குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்ற தமிழக வீரர்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சாய் சுதர்சன் 53 (38) மற்றும் விஜய் சங்கர் 63(24) அதிரடியில் ஆட்டத்தை வெளிப்படுத்தி குஜராத் அணி முதல் முறையாக 200 ரன்களுக்கு மேல் பதிவு செய்ய உதவினார்கள் என்று கூறினால் மிகையில்லை.
அதன்பின் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி குஜராத் அணிக்கு நெருக்கடி அளித்தார்கள், ஆனால் போட்டியின் போக்கை மாற்றி அமைக்கும் வகையில் குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ரஷித் கான் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து குஜராத் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதி ஓவர் வரை சென்ற போட்டியில் கொல்கத்தா அணியின் முன்னணி வீரர்கள் அனைவரும் ஆட்டமிழந்த நிலையில், குஜராத் அணி தான் வெற்றி பெரும் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக களத்தில் இருந்த கொல்கத்தா அணி இளம் வீரர் ரிங்கு சிங் கடைசி ஓவரில் குஜராத் பவுலர் வீசிய யாஷ் தயாள் வீசிய பந்துகளை நாலா பக்கமும் சிதறடித்து சிக்ஸர் மழை பொழிந்தார்.
இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் காப்பானாக செயல்படுத்த ரிங்கு சிங் 5 சிக்ஸர்கள் அடித்து அணிக்கு மிரட்டல் வெற்றியை பெற்று தந்தார், குறிப்பாக 21 பந்துகளில் 48 ரன்கள் பெற்று அசத்தினார்.ஐபிஎல் அரங்கில் மறக்க முடியாத மிரட்டல் போட்டியாக இந்த போட்டி பதிவானது என்று கூறினால் மிகையில்லை. கொல்கத்தா அணி ஐபிஎல் 2023 தொடரில் தோல்வியே சந்திக்காத அளித்தது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தோல்வியை அளித்து வெற்றியை பெற்று அசத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.