35 வது பிறந்தநாளை கொண்டாடும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல்..!! | kkr player andre russell 35th birthday

கிரிக்கெட் விளையாட்டில் டி20 தொடர் அறிமுகமான பிறகு போட்டியின் போக்கே மாறிவிட்டது என்று கூறினால் மிகையில்லை , இந்த டி20 தொடரில் அதிரடி ஆட்டம் அதிரடி ஆட்டத்துக்கு பேர் போன வீரர்களில் முக்கிய இடத்தில் உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் இன்று 35 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இந்நிலையில் ஆண்ட்ரே ரஸ்ஸல் உடைய ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ஆண்ட்ரே ரஸ்ஸல் ஜமைக்கா நாட்டில் பிறந்து மேற்கிந்திய தீவுகள் அணிக்காக சர்வதேச கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார், மிரட்டல் ஆல் ரவுண்டரான ரஸ்ஸல் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரு பிரிவுகளிலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பல போட்டிகளில் தனது அணிக்கு வெற்றிகளை பெற்று தந்துள்ளார்.
சர்வதேச அளவில் மட்டுமல்லாமல் உள்நாட்டு அளவிலும் டி20 தொடர் கிரிக்கெட்டிற்கு பேர் போன வீரராக ஆண்ட்ரே ரஸ்ஸல் கலக்கி வருகிறார் என்று கூறினால் மிகையில்லை, குறிப்பாக இந்தியாவின் உள்நாட்டு தொடரான ஐபிஎல் தொடரில் பல தருணங்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரங்கை பலமுறை அதிர வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் 2012 ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் அசத்தல் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல் 106 போட்டிகளில் 175.37 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி 10 அரைசதம் உட்பட 2143 ரன்கள் பெற்றார் ,குறிப்பாக அதிகபட்சமாக 88 ரன்கள் பதிவு செய்துள்ளார் . அதே போல் பவுலிங்கில் 94 விக்கெட்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் ரஸ்ஸல் பதிவு செய்த சில அதிரடி ஆட்டங்கள் :
ஆண்ட்ரே ரஸ்ஸல் VS ஆர்சிபி (2019) :
ஐபிஎல் 2019 வது தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆண்ட்ரே ரஸ்ஸல் 13 பந்துகளில் 48 ரன்களை 369.20 ஸ்டிரைக் ரேட்டில் பதிவு செய்து அரங்கை அதிர வைத்தார்.
இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 206 ரன்கள் சேஸ் செய்து வெற்றி பெற்றது , இதற்கு முக்கிய காரணமாக ரஸ்ஸல் உடைய ஆட்டம் அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ரே ரஸ்ஸல் VS மும்பை இந்தியன்ஸ் (2019) :
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணி சார்பில் விளையாடிய ஆண்ட்ரே ரஸ்ஸல் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி 40 பந்துகளில் 8 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரி உட்பட 80 ரன்கள் பெற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 232 ரன்கள் பெற உதவி அணிக்கு வெற்றியை பெற்று தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ரே ரஸ்ஸல் VS பஞ்சாப் கிங்ஸ் (2022) :
ஐபிஎல் அரங்கில் மீண்டும் வான்கடே மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் 32 பந்துகளில் 8 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரி 70 ரன்கள் பதிவு செய்து அரங்கை அதிர வைத்தார். இந்த போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்த கொல்கத்தா அணியை தனி ஒருவனாக போராடி வெற்றி பெற்று தந்தார்.
இன்றைய அளவிலும் ஐபிஎல் அரங்கில் மறக்க முடியாத ஒரு போட்டியாக பஞ்சாப் அணிக்கு எதிராக ரஸ்ஸல் விளையாடிய அதிரடி ஆட்டம் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் ஆண்ட்ரே ரஸ்ஸல் உடைய அதிரடி ஆட்டத்தை பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு என்று கூறினால் மிகையில்லை, பல தருணங்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வெற்றிகளை பெற்று தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2023 தொடரில் இதுவரை பெரிய அளவில் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தாத ரஸ்ஸல் தனது பிறந்த நாள் ஆன இன்று நடைபெற உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி ஆட்டத்தை நிகழ்த்துவர் என்று பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.