ஷ்ரேயஸ் ஐயர் ஐபிஎல் தொடரில் இருந்து விலக வாய்ப்பு..!! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரும் சந்தேகம்..!! | kkr team 2023 captain

ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் மிக விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில், இந்த தொடருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் பல முன்னணி வீரர்கள் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ளார்கள். அந்த வரிசையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணியின் முன்னணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியா எதிரான ஒருநாள் தொடரில் இருந்து முழுமையாக விலகினார். இதையடுத்து தற்போது ஷ்ரேயஸ் ஐயர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, எனவே இன்னும் 4-5 மாதங்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் ஐபிஎல் 2023 ஆம் தொடரில் இருந்து முழுமையாக விலக உள்ளார் என்று எதிர்பார்க்க படுகிறது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வந்த ஷ்ரேயஸ் ஐயர், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி நிர்வாகம் சார்பில் 12.25 கோடிக்கு 2022 ஆம் ஆண்டு வாங்கப்பட்ட ஷ்ரேயஸ் ஐயர் சிறப்பாக அணியை வழி நடத்தி வந்த நிலையில், தற்போது 2023 ஆம் தொடருக்கு முன் கொல்கத்தா அணி தரப்பில் இருந்து புதிய கேப்டன் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது.
ஷ்ரேயஸ் ஐயர் ஐபிஎல் தொடர் மட்டுமின்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என்று தெரியவந்துள்ளது, மேலும் நேரடியாக ஒருநாள் உலக கோப்பை தொடரில் பங்கேற்பார் என்று தெரிய வந்துள்ளது.ஐபிஎல் 2023 ஆம் தொடர் வரும் மார்ச் 31 ஆம் தேதி முதல் ஆரம்பம் ஆக உள்ளது, முன்னணி வீரர்கள் பலர் தொடரில் இருந்து விலகி உள்ளது ரசிகர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2023 ஆம் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் போட்டியில் ஏப்ரல் 1ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.