ஐபிஎல் 2023 : ஷ்ரேயஸ் ஐயர் ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து முக்கிய அப்டேட்..!!

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக உள்ள இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவ கண்காணிப்பில் உள்ள நிலையில், இந்த தொடரில் பங்கேற்பது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் முக்கிய உள்நாட்டு தொடராக விளங்கும் ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் மிக விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில்,அனைத்து அணிகளும் தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டு உள்ளார்கள். இந்த தொடரில் இளம் வீரர்கள் படையை கொண்டு முக்கிய அணியாக விளங்கும் கொல்கத்தா ந்யத் ரைடர்ஸ் அணிக்கு தொடருக்கு முன்னேரே மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அதாவது கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது முதுகு பகுதியில் வலி ஏற்பட்ட நிலையில் மருத்துவர்கள் பரிசோதனைக்கு சென்றார்.அதன்பின் மருத்துவர்கள் அறிவுறுத்தலின் படி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில் வரும் மார்ச் 31 ஆம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் தொடரில் ஷ்ரேயஸ் ஐயர் பங்கேற்பாரா என்பது மிகவும் சந்தேகத்தில் உள்ள நிலையில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது, தற்போது மும்பையில் உள்ள பிரபல மருத்துவர் அபய் நேனே ஷ்ரேயஸ் ஐயரை சோதித்த பிறகு ஒரு 10 நாட்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்பின் ஸ்ரேயாஸ் ஐயர் பரிசோதிக்கப்பட்டு அவரது உடல்நிலை பொறுத்து ஐபிஎல் தொடரில் பங்கேற்பது குறித்து உறுதியான முடிவு எடுக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. மேலும் பிசிசிஐ தரப்பில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவது குறித்து எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரின் 16 வது சீசனில் பங்கேற்க உள்ள கொல்கத்தா அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்படுவாரா இல்லை ஷ்ரேயஸ் ஐயரே கேப்டனாக தொடர்வாரா என்பது குறித்து தகவல் விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.