ராணா - ரிங்கு சிங் அதிரடியால் வெற்றி பெற்ற கொல்கத்தா.. | CSK vs KKR Highlights IPL 2023

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற [மே 14 ஆம் தேதி] ஐபிஎல் 2023 தொடரின் 61 -வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்குவாட் - டெவன் கான்வே இருவரும் களமிறங்கினர்.
இந்த பாட்னஷிப் சிறப்பான தொடக்கத்தை கொடுக்காத நிலையில், ருதுராஜ் 17(13) ரன்களில் விக்கெட்டை பறிக்கொடுத்தார். பின்னர் வந்த ராகானே 16(11) ரன்களிலும், டெவன் கான்வே 30(28) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து சென்னை அணி 11 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்தது.
அடுத்தடுத்த விக்கெட்டை பறிக்கொடுத்த சென்னை அணிக்கு தனது அதிரடியால் ஸ்கோரை சற்று அதிகரித்தார் ஷிவம் துபே 48(34). இறுதியில், சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. பின்னர், 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இழக்கோடு கொல்கத்தாவின் ஜேசன் ராய் – ரஹ்மானுல்லா குர்பாஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில், குர்பாஸ் 1(4) ரன்னிலும், வெங்கடேஷ் 9(4) ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் அடுத்த தொடக்க வீரரான ஜேசன் ராய் 12(15) ரன்களில் ஆட்டமிழக்க, நிதிஷ் ராணா 57(44) – ரிங்கு சிங் 54(43) ஜோடி அதிரடி காட்டியது. இதனால், 18.3 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 145 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. 15 புள்ளிகளுடன் சென்னை அதே 2வது இடத்தில் நீடிக்கிறது.