ஐபிஎல் 2023 தொடரில் இருந்து கொல்கத்தா அணியின் முன்னணி வீரர் விலகல்..!! | kkr ipl 2023 all rounder update

இந்திய மண்ணில் ஐபிஎல் 2023 ஆம் தொடர் மிகவும் அதிரடியாக வகையில் ஆரம்பித்து சென்று கொண்டிருக்கிறது. இந்த தொடரில் முக்கிய அணியாக விளங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் போட்டியில் தோல்வியை சந்தித்து உள்ள நிலையில், அடுத்த அதிர்ச்சியாக கொல்கத்தா அணியின் முன்னணி வீரர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிய கேப்டன் நிதிஷ் ராணா தலைமையில் களமிறங்கி விளையாடி வருகிறது, இதுவரை ஐபிஎல் தொடரில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்று முன்னணி அணியாக விளங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பு ஆண்டில் சிற்பபாக செயல்பட்டு 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள முன்னணி ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் ஐபிஎல் 2023 ஆம் தொடரில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்தார். அதாவது வங்கதேச வீரரான ஷகிப் அல் ஹசன் தனது அணிக்காக சர்வதேச போட்டிகளில் பங்கேற்பது மற்றும் பல சொந்த காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அணி நிர்வாகத்திடம் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் ஏலத்தில் ஷகிப் அல் ஹசனை 1.5 கோடிக்கு வாங்கினார்கள்,எனவே இந்த தொடரில் பங்கேற்க அவர் இடத்திற்கு புதிய வீரரை தேர்வு செய்ய கொல்கத்தா அணி நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.