கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அசத்தல் வெற்றி..!! ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏமாற்றம்..!! | kkr 2nd win against rcb 2023

ஐபிஎல் 2023 தொடரில் நிதிஷ் ராணா தலைமையில் ஆன கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 2வது முறையாக தோற்கடித்தது, மேலும் தொடரில் தனது தொடர் தோல்விகளுக்கு முடிவு கட்டி வெற்றி பயணத்தை மீண்டும் தொடர்ந்துள்ளது
இன்று பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணி முன்னணி வீரர்கள் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தார்கள்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 200 ரன்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இலக்காக அளிக்கப்பட்டது. இதனை அடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூரு அணி முன்னணி வீரர்கள் பாப் டு பிளெசிஸ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் உடனுக்குடன் கொல்கத்தா அணி இளம் வீரர் சுயாஷ் சர்மா பந்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்கள்.
அதன்பின் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பொறுப்புடன் ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்த பின்னர் 56(37) ரன்களில் ஆண்ட்ரே ரஸ்ஸல் பந்தில் ஆட்டமிழந்த போது போட்டி கொல்கத்தா அணியின் பக்கம் திரும்பியது. அதன்பின் களமிறங்கிய வீரர்கள் கொல்கத்தா அணியின் பவுலிங்கில் திணறி ஆட்டமிழந்த நிலையில், அணியின் கடைசி நம்பிக்கையாக விளையாடி வந்த முன்னணி வீரர் தினேஷ் கார்த்திக் 22(18) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெங்களூர் அணியின் ஹோம் கிரவுண்ட் ஆன சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று அசத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.