IND VS AUS TEST 2023 : உஸ்மான் கவாஜா சதம் விளாசல்..!! பரிதாப நிலையில் இந்திய அணி..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் 4வது டெஸ்ட் போட்டியில், முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி மிகவும் வலுவான நிலையில் உள்ளது. இந்திய அணியின் ஸ்பின் பவுலர்கள் விக்கெட் எடுக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியும் 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்ற நிலையில், அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் பலப்பரீட்சை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த இறுதி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள், குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா சதம் அடித்து அசத்தினார். இந்திய அணியின் பவுலர்கள் பெரிதும் முயன்றும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவாஜா ஆஸ்திரேலியா அணியின் காப்பானாக செயல்பட்டார்.
இந்த தொடர் முழுவதும் இந்திய ஸ்பின் பவுலர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், இந்த 4வது டெஸ்ட் போட்டியில் விக்கெட்களை பெற முடியாமல் தவித்தனர். இந்திய அணி சார்பில் வேகப்பந்து பவுலர் முகமது ஷமி 2 விக்கெட்களையும், அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 1 விக்கெட்டையும் பெற்றனர்.
இந்நிலையில் 4 வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் பதிவு செய்து மிகவும் வலுவான நிலையில் உள்ளது,மேலும் தற்போது களத்தில் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 104*(251) ரன்களுடனும் இளம் வீரர் கேமரூன் கிரீன் 49*(64) ரன்களுடனும் மிகவும் சிறப்பான நிலையில் இருந்த போது முதல் நாள் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த டெஸ்ட் போட்டியில் கட்டாய வெற்றியை நோக்கி விளையாடி கொண்டிருக்கும் இந்திய அணி, நாளை 2வது நாள் ஆட்டத்தில் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி விக்கெட்களை பெற வேண்டும் இல்லையென்றால் 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் கடினமாக அமைந்து விடும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் இணையத்தில் பதிவு செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.