IND VS AUS TEST 2023 : கவாஜா மற்றும் கிரீன் அதிரடி..!! மோசமான நிலையில் இந்திய அணி..!! | ind vs aus 2023 4th test day 2

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 4வது டெஸ்ட் போட்டியில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடி வரும் நிலையில், இந்திய அணியின் பவுலர்களை உஸ்மான் கவாஜா மற்றும் கேமரூன் கிரீன் ஜோடி துவம்சம் செய்து வருகிறார்கள்.
பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில், 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறார் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா என்று கூறினால் மிகையில்லை.
இந்த டெஸ்ட் போட்டியில் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 255 பதிவு செய்தது, ஆஸ்திரேலியா அணியின் இடது கை தொடக்க வீரர் கவாஜா இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார். மேலும் அவருடன் ஜோடி சேர்ந்த இளம் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இன்று தொடங்கிய டெஸ்ட் போட்டியின் 2வது நாளில் தொடர்ந்து அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய கவாஜா 150*(354) ரன்கள் பதிவு செய்த நிலையில், மறுமுனையில் மற்றொரு வீரர் கேமரூன் கிரீன் 95*(135) ரன்கள் பெற்றார். இந்திய அணியின் பவுலர்கள் இந்த ஜோடியின் பார்ட்னர்ஷிப்பை முறியடிக்க போராடி வருகிறார்கள், மேலும் தற்போது மதிய இடைவேளை வரை ஆஸ்திரேலியா அணி 347/4 ரன்கள் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் தான் தொடரை கைப்பற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை உறுதி செய்ய முடியும், ஆனால் இந்திய அணியின் வெற்றிக்கு சவால் விடும் வகையில் ஆஸ்திரேலிய வீரர்கள் கவாஜா மற்றும் கிரீன் களத்தில் அதிரடியை வெளிப்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.