பிக்பாஷ் லீக் 2022-2023 : ஒரே பந்தில் 16 ரன்கள் வழங்கிய பௌலர்..! ஆச்சரியத்தில் ரசிகர்கள் ..!

ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்று வரும் முக்கிய டி20 தொடரான பிக்பாஷ் லீக் தொடரில் இன்றைய 53 வது போட்டியில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் மற்றும் சிட்னி சிக்சர்ஸ் மோதினார்கள்.அதில் ஒரே பந்தில் 16 ரன்கள் பதிவாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிட்னி சிக்ஸர்ஸ் அணி அதிரடி பேட்டிங் வெளிப்படுத்தியது,இதற்கு முக்கிய காரணம் அந்த அணியில் இடம் பெற்றுள்ள வீரர் ஸ்டீவன் ஸ்மித் தான் என்றால் மிகையில்லை. இந்த போட்டியில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் சார்பில் பந்து வீசிய ஜோயல் பாரிஸ் ஒரே பந்தில் 16 ரன்கள் வழங்கி பிக்பாஷ் அரங்கில் புதிய விந்தையை நிகழ்த்தியுள்ளார்.
ஜோயல் பாரிஸ் வீசிய 2 வது ஓவரில் 3 வது பந்தில் சிட்னி சிக்சர்ஸ் வீரர் ஸ்டீவன் ஸ்மித் சிக்ஸர் அடித்தார், அந்த பந்து நோ பால் ஆனா நிலையில் மீண்டும் 3 வது பந்தை வீசிய பாரிஸ் வைட் பவுண்டரியை வழங்கினார்.அதன் பின் மீண்டும் 3 வது பந்தை வீசிய போது அதை மீண்டும் ஸ்டீவன் ஸ்மித் பவுண்டரியாக மாற்றினார்.
இந்நிலையில் ஜோயல் பாரிஸ் வீசிய ஒரே பந்தில் 16 ரன்கள் பதிவானது, மேலும் அதே ஓவரில் 21 ரன்கள் கொடுத்தார்.இந்த போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, அணிக்காக அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி 6 சிக்ஸர்கள் உட்பட 66(33) ரன்கள் அடித்த ஸ்டீவன் ஸ்மித் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியின் வெற்றி மூலம் 21 புள்ளிகளுடன் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 2வது இடத்தில் உள்ளது.