சிஎஸ்ஏ டி20 லீக் : சென்னை சூப்பர் கிங்ஸ் வழியில் அசத்திய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்…! ரசிகர்கள் நெகிழ்ச்சி..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 12, 2023 & 12:00 [IST]

Share

தென்னாப்பிரிக்கா மண்ணில் புதிய டி20 தொடர் கோலாகலமாக ஆரம்பித்து நடந்து வருகிறது, இந்த தொடரில் இடம்பெற்றுள்ள அணிகள் எல்லாம் ஐபிஎல் தொடரில் இருக்கும் உரிமையாளர்கள் தான் வாங்கியுள்ளார்கள்.இந்த தொடரில் நேற்றைய போட்டியில் சி.எஸ்.கே  அணியின் உரிமையாளர்கள் வாங்கிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு தனி அடையாளம் உள்ளது, குறிப்பாக பல போட்டிகளில் அதிரடியாகவும் , சில  போட்டிகளில்  இறுதி வரை சென்றும் வெற்றியை பெறும் வழக்கத்தை கொண்டுள்ளார்கள்,அதேபோல் நேற்று நடந்த  தென் ஆப்பிரிக்கா தொடரின் போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும்  ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதினார்கள்.

இந்த போட்டியில் பேட்டிங் செய்த ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்  அணி வீரர்கள் ஆரம்பத்தில் உடனுக்குடன் தங்களின் விக்கெட்களை இழந்தார்கள், அதன்பின் அணியின் கேப்டன் டூ பிளேஸிஸ் நிதானமாக விளையாடி அணியின் நிலையை சற்று மாற்றினார்.

அடுத்து களமிறங்கிய அணியின் வீரர் டொனாவன் ஃபெரீரா மற்றும் யாரும் எதிர்பார்க்காத விதமாக அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி 82(40)* ரன்களை அடித்து அணியின் நிலையை தலைகீழாக மாற்றினார்.

அவருக்கு உதவும் விதமாக அணியின் மற்றோரு வீரர் ரொமாரியோ ஷெப்பர்ட் 40(20) ரன்களை அடித்தார்.இதன் மூலம் முடிந்து விட்டது என்று நினைத்த போட்டி அப்பொழுது தான் ஆரம்பித்தது.

இதை பார்த்து பல கிரிக்கெட் ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டத்தை ஒப்பிட்டு இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் வெற்றியை பெற்றது,இதனை குறிப்பிட்டு ரசிகர்கள் இணையத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வழியில் அசத்தும்  ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் என்ற பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.