IND VS AUS SERIES 2023 : ஆஸ்திரேலியா அணியில் இருந்து மேலும் ஒரு முக்கிய வீரர் விலகல்..!! காயத்தால் தொடரும் சோகம்..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில், இதையடுத்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாட உள்ளது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்கள் பலர் காயம் காரணமாக விலகிய நிலையில் மேலும் ஒரு முக்கிய வீரர் ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்திய மண்ணில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ஒருநாள் உலக கோப்பை தொடருக்கு முன் அனைத்து அணிகளும் பயிற்சி பெறும் வகையில் இந்திய மண்ணில் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இந்திய சுற்றுப்பயணத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் கடைசி டெஸ்ட் போட்டியில் விரைவில் விளையாட உள்ளது.
அதன்பின் ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ள நிலையில், இரு அணிகளும் சமீபத்தில் ஒரு தொடருக்கான அணிகளை அறிவித்தார்கள். இதில் ஆஸ்திரேலிய அணி சார்பில் இடம்பெற்றிருந்த இளம் வேகப்பந்து பவுலர் ஜே ரிச்சர்ட்சன் ஆஸ்திரேலியா உள்நாட்டு தொடரில் விளையாடிய போது தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் மேலும் தீவிரமான நிலையில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தன் மூலம் ஒருநாள் அணியில் ஜே ரிச்சர்ட்சன் இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வீரர்கள் பலர் காயம் காரணமாக ஓய்வில் உள்ள நிலையில் ஒருநாள் தொடருக்கு முன்பு அணியில் இருந்து ஜே ரிச்சர்ட்சன் விலகியதால் ஆஸ்திரேலியா அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருக்கும் ஆஸ்திரேலிய வீரர் ஜே ரிச்சர்ட்சன் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய முடியாத நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து விலகவும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, எனவே மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.