IND VS AUS 2023 : 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து முன்னணி இந்திய வீரர் விலகல்..!! பிசிசிஐ அறிவிப்பு..!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் வரும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது, அடுத்து நடக்க இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் முக்கிய வீரர் விலகியுள்ளார்.
இந்திய அணி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை பந்தாடியது என்று கூறலாம், குறிப்பாக அணியின் சுழல் பவுலர்களை வைத்து தரமான சம்பவத்தை இந்திய அணி நிகழ்த்தியது.
இதையடுத்து 2வது டெஸ்ட் போட்டியில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இரு அணிகளும் விளையாட உள்ள நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து பௌலர் ஜெயதேவ் உனட்கட் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியாவின் உள்ள நாட்டு தொடர்களில் முக்கிய தொடரான ரஞ்சி கோப்பையின் இறுதிப் போட்டிக்கு சவுராஷ்டிரா அணியும் பெங்கால் அணியும் தகுதி பெற்றுள்ள நிலையில், சவுராஷ்டிரா அணிக்காக இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்காக ஜெயதேவ் உனட்கட் இந்திய அணியில் இருந்து விலகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ரஞ்சி கோப்பையின் இறுதிப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் பிப்ரவரி 16ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிப்ரவரி 17 டெல்லியில் நடைபெற உள்ள 2வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் இருந்து உனட்கட் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி தொடரில் 1-0 என்ற நிலையில் முன்னிலையில் உள்ளது, மேலும் இன்னும் உள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தொடரை முழுமையாக கைப்பற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.