பும்ராவிற்கு அறுவை சிகிச்சை முடிந்தது..!! ஆறு மாத காலம் ஓய்வு என்று தகவல்..!!

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த ஜஸ்பிரித் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து சமீப காலமாக விலகி இருந்த நிலையில், காயத்தில் இருந்து முழுமையாக மீண்டு வர அறுவை சிகிச்சை செய்ய நியூசிலாந்து சென்றார்.தற்போது பும்ரா உடல்நிலை குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜஸ்ப்ரித் பும்ரா கடந்த செப்டம்பர் மாதம் 2022 முதல் காயம் காரணமாக எந்த வித சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்காமல் ஓய்வில் இருந்தார், அதன் பின் 2023 ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் பும்ரா பங்கேற்பார் என்று பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டது. இந்த தொடருக்கு முன் மீண்டும் பிசிசிஐ தரப்பில் பும்ராவிற்கு ஏற்பட்டுள்ள காயம் முழுமையாக குணமாக வில்லை எனவே ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பும்ரா மீண்டும் எப்போது இந்திய அணியில் இடம் பெறுவார் என்று பல கேள்விகள் எழுந்த நிலையில், பும்ரா 2023 ஐபிஎல் தொடரில் முழுமையாக இருந்து விலகினார் மேலும் ஒருநாள் உலக கோப்பை தொடரில் பங்கேற்பதில் சந்தேகம் உள்ளது என்று செய்திகள் பரவி வந்தது.தற்போது அண்மையில் வெளியான தகவல் படி பும்ரா முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய நியூசிலாந்து சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார் என்று உறுதியாகி உள்ளது.
நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள மருத்துவமனையில் பிரபல எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ரோவன் ஷவுடன் தலைமையில் பும்ராவிற்கு வெற்றிகரமாக முதுகு பகுதியில் அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பும்ராவிற்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததாக தெரிய வந்துள்ளது, மேலும் ஆறு மாத கால ஓய்விற்கு பிறகு தான் பும்ரா முழுமையாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியும் என்று தெரியவந்துள்ளது.இந்நிலையில் இந்திய மண்ணில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள உலக கோப்பை தொடரில் பும்ராவை மீண்டும் களத்தில் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.