பார்டர் கவாஸ்கர் தொடரில் இருந்து ஜஸ்பிரிட் பும்ரா விலகினார்..?? பிசிசிஐ அறிவிப்பு..??

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து பௌலர் ஜஸ்பிரிட் பும்ரா காயம் காரணமாக ஓய்வில் இருந்து வரும் நிலையில், பார்டர் கவாஸ்கர் தொடரில் கடைசி இரண்டு போட்டிகளில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பும்ரா அணிக்கு திரும்புவது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது, இந்த தொடரில் கட்டாய வெற்றிகளை நோக்கி இந்திய அணி விளையாடி வரும் நிலையில் அணியின் பவுலிங் யூனிட்டை பலப்படுத்தும் விதத்தில் ஓய்வில் இருக்கும் அணியின் முன்னணி வேகப்பந்து பௌலர் ஜஸ்பிரீத் பும்ரா கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கலந்து கொண்டு உதவுவார் என்று தொடருக்கு முன்னதாக பிசிசிஐ அறிவித்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட காயத்தில் இருந்து பும்ரா மீண்ட நிலையில் நேஷனல் கிரிக்கெட் அகாடமியில் உடல் திறனை நிரூபிக்க பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார், ஆனால் தற்போதைய சூழ்நிலையில் பிசிசிஐ பும்ரா டெஸ்ட் தொடரில் பங்கேற்க அனுமதிக்காது என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணி இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ஒரு நாள் உலக கோப்பை தொடரை கைப்பற்றும் முனைப்பில் முழு வீச்சில் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் முக்கிய பௌலர் ஆனா பும்ரா தற்போது வரை கடந்த ஆண்டு ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக குணமாகாத நிலையில் டெஸ்ட் தொடரில் பங்கேற்று காயம் ஏற்பட்டால் ஒருநாள் உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு பெரிய பலவீனமாக இருக்கும் என்பதை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய டெஸ்ட் அணியில் ஷமி , சிராஜ், உமேஷ் யாதவ் , ஜெயந்த் யாதவ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ள நிலையில் பும்ராவிற்கு மேலும் ஓய்வு அளிக்கலாம் ஒருநாள் தொடரில் முழுமையாக பழைய பார்மில் சிறப்பான பௌலிங்கை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்க படும் நிலையில் இந்த முடிவை பிசிசிஐ எடுக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சேத்தன் சர்மா தலைமையில் இந்திய அணியின் தேர்வு குழு விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.