IND VS AUS TEST 2023 : ஜடேஜா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தல்..! மாஸ் கம்பேக் என ரசிகர்கள் ஆரவாரம்..!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் காயத்தில் இருந்து மீண்டு வந்து அணியில் இடம்பிடித்த ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அசத்தல் பௌலிங்கை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியா வீரர்களை திணற வைத்தார். இதையடுத்து ரசிகர்கள் இணையத்தில் மாஸ் கம்பேக் என்று பாராட்டி வருகிறார்கள்.
இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் சூழல் பௌலிங்கை சமாளிக்க முடியாமல் திணறியது, இந்த போட்டியின் மீது பல எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் காயத்தில் இருந்து மீண்டு வந்து முதல் போட்டியில் விளையாடும் ரவீந்திர ஜடேஜா மீது பல விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில் தன் மீது எழுந்த விமர்சனங்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா தனது சூழலில் ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வீரர்கள் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார், குறிப்பாக இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிவில் ஜடேஜா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் மார்னஸ் லாபுசாக்னே 49(123), ஸ்டீவன் ஸ்மித் 37(107), மாட் ரென்ஷா 0(1), பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 31(84) மற்றும் டாட் மர்பி 0(5) ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணிக்கு உதவினார், சர்வதேச அளவில் ஜடேஜா 11வது முறையாக 5 விக்கெட் கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் 22 ஓவர்கள் வீசி 8 ஓவர்கள் மெய்டன் செய்து 47 ரன்கள் வழங்கி 5 விக்கெட்டுகளை பெற்றுள்ளார், இதனால் ஆஸ்திரேலியா அணி மிக விரைவாக 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ரவீந்திர ஜடேஜா வின் மிரட்டல் பவுலிங்கை பார்த்து இந்திய ரசிகர்கள், கிரிக்கெட் நிபுணர்கள் உட்பட பலர் தனது விமர்சனங்களுக்கு பதில் அடி கொடுத்து தனது திறனை அனைவருக்கும் உணர்த்தியுள்ளார் என்று இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.