ரஞ்சி கோப்பையில் மாஸ் காட்டிய ஜடேஜா..! சரியான கம்பேக் ரசிகர்கள் புகழாரம்..!

இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ஆனா ரவீந்திர ஜடேஜா சௌராஷ்டிரா அணி சார்பில் ரஞ்சி கோப்பையில் தமிழ்நாடு அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் பவுலிங்கில் அசத்தியுள்ளார்.இது காயத்தில் இருந்து மீண்ட ஜடேஜா வின் கம்பேக் என்று ரசிகர்கள் இணையத்தில் புகழ்ந்து வருகிறார்கள்.
இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டர் களுள் ஒருவர் ஆனா ரவீந்திர ஜடேஜா கடந்த ஆண்டு ஆசிய கோப்பையில் ஏற்பட்ட காயத்தினால் அணியில் இருந்து விலகி சிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் இருந்தார், தற்போது காயத்தில் இருந்து மீண்ட ஜடேஜா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளார்.
அதற்கு முன்னர் இந்திய அணியில் இடம்பெற தனது உடல் தகுதியும் திறனையும் ஜடேஜா நிரூபித்து ஆகா வேண்டும், எனவே ரஞ்சி கோப்பையில் சௌராஷ்டிரா அணி எதிரான போட்டியில் பங்கேற்க முடிவு செய்தார்.இந்நிலையில் தமிழ்நாடு அணிக்கு எதிராக சென்னையில் நடந்த போட்டியில் பங்கேற்க ஜடேஜா முதல் இன்னிங்ஸில் பௌலிங் செய்த பெரிய அளவில் ஏதும் செய்யவில்லை.
அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸில் சௌராஷ்டிரா அணி சார்பில் பந்து வீசிய ஜடேஜா மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி 7 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.அந்த இன்னிங்ஸில் 17.1 ஓவர்கள் வீசிய ஜடேஜா 3 ஓவர்கள் மெய்டன் செய்து 53 ரன்கள் வழங்கி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.இதன் மூலம் தனது பழைய பவுலிங் திறனை அனைவர் முன்னிலையில் நிரூபித்துள்ளார்.
அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் ஜடேஜா தனது பேட்டிங் திறனையும் வெளிப்படுத்துவர் என்று பெரிதும் எதிர்பார்க்க படுகிறது. இந்திய அணி அடுத்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக முக்கிய டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள நிலையில் ஜடேஜா நல்ல பார்மில் அணியில் இடம் பெற்றால் அணிக்கு பலமாக இருக்கும் என்று ரசிகர்கள் இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.