களத்தில் இளம் வீரர்களுக்கு ஆதரவாக இருப்பார் விராட் கோலி : வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா புகழாரம்

விராட் கோலி, இந்திய இளம் வீரர்களுக்கு ஆதரவாக இருப்பார் என்று வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று இருக்கிறது. அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள் மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளைக் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.
கடந்த திங்கட்கிழமை தொடங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரண்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளுக்கு 312 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் முதல் போட்டியிலேயே சதம் அடித்து களத்தில் இருக்கிறார்.
2023-2025 ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றில் இந்த டெஸ்ட் தொடர இடம் பெற்றுள்ளதால் இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் தொடராக இது கருதப்படுகிறது.
2014 ஆம் ஆண்டு விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்றதில் இருந்து இந்தியா வலிமையான டெஸ்ட் அணியாக உருவானது. அவரது தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக இலங்கை வெஸ்ட் இண்டீஸ் தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட் போட்டிகளை வெற்றி பெற்றது. இந்நிலையில் கடந்த தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விளையாடிய விராட் கோலி, திடீரென டெஸ்ட் தொடரில் கேப்டன் பகுதியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து கேப்டன் பதவியில் ரோகித் சர்மா வந்து அமர்ந்தார். இருப்பினும் அவர் அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டு விலகுவதாலும், சரியான கேப்பிடன்சி இல்லாததன் காரணமாக சமீப காலமாகவே இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தடுமாறி வருகிறது.
இந்திய அணி சர்வதேச அரங்கில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருந்தபோது இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக இருந்தவர் எம்எஸ்கே பிரசாத். இந்நிலையில் அவர் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட வேண்டும் என்று தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார் . இந்நிலையில் விராட் கோலியின் கேப்டன்சி குறித்து வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா மனம் திறந்து உள்ளார்.
இது குறித்து பேசியுள்ள அவர், விராட் கோலிக்கு எப்படி இளம் வீரர்களை மேலே கொண்டு வருவது என்பது தெரியும். அவர் பல ஆண்டுகள் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். அவர் இளைஞர்களின் இயல்பான ஆட்டத்திற்கு ஆதரவாக இருந்தார். சுதந்திரமாக விளையாடும்படி அவர் கூறுவார் என பேசி இருக்கிறார். இசான் சர்மாவின் இந்த பேச்சால், விராட் கோலி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.