ஐபிஎல் தொடரில் அதிக சதம் அடித்த டாப் 5 வீரர்கள் ஒரு பார்வை..!! | most ipl centuries list

இந்தியாவின் முக்கிய உள்நாட்டு டி20 தொடர்களில் ஒன்றான ஐபிஎல் தொடரில், இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அதிரடி ஆட்டத்தின் மூலம் அதிக சதங்கள் அடித்து அசத்திய முன்னணி மிரட்டல் வீரர்கள் பற்றி காண்போம்.
ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் வரும் மார்ச் 31 2023 அன்று தொடங்கும் என்ற தகவல் வெளியானதிலிருந்து கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும், இந்த தொடரை காண மிகுந்த ஆர்வத்தில் உள்ளார்கள். அதற்கு முன் ஐபிஎல் தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி முக்கிய இடத்தை பிடித்துள்ள வீரர்கள் பற்றி காண்போம்.
கிறிஸ் கெயில் :
ஐபிஎல் தொடரில் மட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட் தொடரிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி “யூனிவேர்சல் பாஸ்” என்ற பட்டத்திற்கு சொந்தக்காரனான கிறிஸ் கெயில் தான் ஐபிஎல் தொடரில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலில் உள்ளார்.இதுவரை ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய கிறிஸ் கெயில் உடைய ரன்கள் பட்டியல்
போட்டிகள் |
142 |
ரன்கள் |
4965 |
சதம் |
6 |
ஸ்ட்ரைக் ரேட் |
148.96 |
சராசரி |
39.72 |
அதிகபட்ச ரன் |
175* |
ஐபிஎல் வரலாற்றில் பல சாதனைகள் படைத்து முக்கிய இடத்தை பெற்றுள்ள கெயில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி :
ஐபிஎல் தொடரில் அதிக சாதனைகள் படைத்த சிறந்த வீரர்களை கொண்ட முக்கிய அணியாக விளங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர் விராட் கோலி இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் 5 சதங்கள் அடித்து அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார்.
போட்டிகள் |
223 |
ரன்கள் |
6624 |
சதம் |
5 |
ஸ்ட்ரைக் ரேட் |
129.15 |
சராசரி |
36.20 |
அதிகபட்ச ரன் |
113 |
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் சிறந்த பார்மில் இருக்கும் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து கிறிஸ் கெயில் உடைய சாதனையை முறியடிப்பார் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்கிறார்கள்.
ஜோஸ் பட்லர் :
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சில ஆண்டுகளாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி முக்கிய வீரராக திகழ்ந்து வரும் ஜோஸ் பட்லர், இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் 5 சதங்கள் அடித்து அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 3 வது இடத்தில் உள்ளார்.
போட்டிகள் |
82 |
ரன்கள் |
2831 |
சதம் |
5 |
ஸ்ட்ரைக் ரேட் |
149.71 |
சராசரி |
39.87 |
அதிகபட்ச ரன் |
124 |
கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரின் முடிவில் அதிக ரன்கள் பெற்று ஆரஞ்சு கேப் பெற்று அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த 2023-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முக்கிய வீரராக திகழ்வார் என்பதில் ஐயமில்லை.
டேவிட் வார்னர் :
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு சாம்பியன் பட்டத்தை பெற்று தந்த பெருமைக்கு சொந்தக்காரர் ஆன ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் டேவிட் வார்னர் தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார், இதுவரை ஐபிஎல் தொடரில் 4 சதம் அடித்து அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளார்.
ஐபிஎல் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் பல ரசிகர்களை பெற்று முக்கிய வீரராக திகழ்பவர் டேவிட் வார்னர் என்று கூறினால் மிகையில்லை.இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் வார்னர் உடைய பங்களிப்பு
போட்டிகள் |
162 |
ரன்கள் |
5881 |
சதம் |
4 |
ஸ்ட்ரைக் ரேட் |
140.69 |
சராசரி |
42.01 |
அதிகபட்ச ரன் |
126 |
கே.எல்.ராகுல் :
ஐபிஎல் தொடரில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தும் இந்திய வீரர்களில் மிகச் சிறந்த ஒருவராக விளங்கும் கே.எல்.ராகுல், சில ஆண்டுகளாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
ஐபிஎல் தொடரில் பல அதிரடி சாதனைகளை படைத்து உள்ள ராகுல் மொத்தம் 4 சதங்கள் பதிவு செய்து அதிக சதங்கள் பதிவு செய்த வீரர்கள் பட்டியலில் 5வது இடத்தைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுல் உடைய பங்களிப்பு
போட்டிகள் |
109 |
ரன்கள் |
3889 |
சதம் |
4 |
ஸ்ட்ரைக் ரேட் |
136.22 |
சராசரி |
48.01 |
அதிகபட்ச ரன் |
132* |
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் இடம்பெற்றுள்ள 10 அணிகளும் 3 ஆண்டுகள் கழித்து தங்கள் ஹோம் கிரவுண்டில் விளையாட உள்ள நிலையில், பல அதிரடி ஆட்டங்கள் அரங்கேறும் என்று மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 2023 ஆம் ஐபிஎல் தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் இடத்தில் மிகவும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.