ஐபிஎல் தொடரில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்ற டாப் 5 வீரர்கள்..!! | ipl top 5 mom winners list

இந்தியாவின் முக்கிய உள்நாட்டு தொடர்களில் ஒன்றாக விளங்கும் ஐபிஎல் தொடரில் ஆரம்பித்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்பாக ஐபிஎல் தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்த வீரர்கள் பற்றி காண்போம்.
இந்த 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது, இந்த தொடரில் 10 அணிகள் மொத்தம் 70 லீக் போட்டிகளில் விளையாட உள்ளார்கள், இந்த போட்டிகள் அனைத்தும் 12 மைதானங்களில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு போட்டியில் தனது சிறந்த ஆட்டத்தின் மூலம் எதிரணியை திணறடித்து தனது அணிக்கு வெற்றியை பெற்று தரும் ஒரு வீரருக்கு போட்டியின் முடிவில் ஆட்டநாயகன் விருது வழங்கப்படும், அப்படி ஐபிஎல் தொடரில் அதிக முறை ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற வீரர்கள் பற்றி பார்ப்போம்.
ஏபி டி வில்லியர்ஸ் :
ஐபிஎல் தொடரின் அதிரடி ஆட்டத்துக்கு பேர் போன முக்கிய வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தனது துரிதமான ஆட்டத்தின் மூலம் மிஸ்டர் 360 என்ற பெயர் பெற்றவர். ஐபிஎல் தொடரில் முதன் முதலில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு அறிமுகமான ஏபி டி, அதன்பின் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இணைந்து பல போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை பெற்று தந்துள்ளார், குறிப்பாக பெங்களூரு அணியின் காப்பானாக செயல்பட்டு வந்தார்.
ஐபிஎல் தொடரில் 25 முறை ஆட்டநாயகன் விருதை ஏபி டி வென்றுள்ளார், கடந்த 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ஏபி டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்றிருந்தாலும் தற்போது வரை அதிக ஆட்டநாயகன் விருது வென்ற வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் நிலைபெற்று அசத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 184 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய ஏபி டி வில்லியர்ஸ் 3 சதம் மற்றும் 40 அரைசதம் உட்பட 5162 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ் கெயில் :
ஐபிஎல் தொடரில் அதிக முறை ஆட்ட நாயகன் விருதை வென்ற வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருப்பவர் யூனிவெர்சல் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெயில் தான், ஐபிஎல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்காக கெயில் விளையாடி உள்ளார். இதுவரை ஐபிஎல் தொடரில் 22 ஆட்டநாயகன் விருதுகளை வென்று அசத்தியுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து கிறிஸ் கெயில் ஓய்வு பெற்றிருந்தாலும், ஐபிஎல் வரலாற்றில் கெயில் படைத்துள்ள சாதனைகளை என்றும் நிலை பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஐபிஎல் தொடரில் இதுவரை 142 போட்டிகளில் விளையாடி உள்ள கிறிஸ் கெயில் 6 சதம் 31 அரைசதம் உட்பட 4965 ரன்கள் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டேவிட் வார்னர் :
ஐபிஎல் தொடரில் முக்கிய வீரராக வலம் வரும் டேவிட் வார்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்காக விளையாடி உள்ளார், வார்னர் இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 18 முறை ஆட்டநாயகன் விருதை கைப்பற்றி அசத்தியுள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக தலைமை தாங்கிய பொழுது சாம்பியன் பட்டத்தை பெற்று தந்த பெருமைக்குரிய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் விளையாடி வரும் வார்னர், 2023-ஆம் ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஐபிஎல் தொடரில் 162 போட்டிகளில் விளையாடி உள்ள வார்னர் 4 சதம் மற்றும் 55 அரைசதம் உட்பட 5881 ரன்கள் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோஹித் சர்மா :
ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டங்களை பெற்று முன்னணி அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது அதிரடி ஆட்டத்துக்கு பேர் போன வீரர் என்று கூறினால் மிகையில்லை.
மும்பை அணியை வெற்றிகரமாக வழி நடத்துவது போல் இந்திய அணியையும் வழிநடத்தி வரும் கேப்டன் ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் 18 முறை ஆட்டநாயகன் விருதை வென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடர் ஆரம்பித்த போது டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ரோஹித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறிய பிறகு சிறந்த வீரராக செயல்பட்டு அணியின் கேப்டனாக உயர்ந்து அசத்தி வருகிறார், இதுவரை ஐபிஎல் தொடரில் 227 போட்டிகளில் விளையாடி உள்ள ரோஹித் சர்மா 1 சதம் 40 அரைசதம் உட்பட 5879 ரன்கள் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகேந்திர சிங் தோனி :
ஐபிஎல் தொடரில் முக்கிய முன்னணி அணியாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ்.தோனி பல போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியின் விளிம்பில் இருந்த சென்னை அணிக்கு வெற்றிகளை பெற்று தந்து உள்ளார், இந்நிலையில் சென்னை அணியின் தூணாக விளங்கும் தோனி ஐபிஎல் தொடரில் 17 முறை ஆட்டநாயகன் விருதை பெற்று அசத்தியுள்ளார்.
இந்த 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடர் எம்.எஸ்.தோனி பங்கேற்கும் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது, மேலும் இந்த முறை ஐபிஎல் தொடரில் தோனி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு மிகவும் உதவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஐபிஎல் தொடரில் 234 போட்டிகளில் விளையாடி உள்ள எம்.எஸ்.தோனி 4978 ரன்கள் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் இடம்பெற்றுள்ள அணிகள் பழைய முறையில் தங்கள் ஹோம் கிரவுண்டில் விளையாட உள்ளார்கள், எனவே 2023 தொடரில் பல அதிரடிகள் இடம் பெற பெரிதும் வாய்ப்புள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் போட்டிகளை காண மிகுந்த ஆர்வத்தில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.