ஐபிஎல் தொடரில் சிறப்பான பவுலிங் செய்து பர்பிள் கேப் பெற்றவர்கள் பட்டியல்..!! | ipl purple cap winners list

உலக அளவில் மிகவும் பிரபலமான டி20 தொடர்களில் முக்கிய ஒன்றாக விளங்கும் இந்தியாவின் ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் விரைவில் ஆரம்பிக்க உள்ள நிலையில், இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி சாதனை படைத்து பர்பிள் கேப் பெற்றவர்கள் பட்டியலை காண்போம்.
ஐபிஎல் தொடரின் இறுதியில் சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்தி அதிக விக்கெட்டுகளை பெறும் வீரருக்கு பர்பிள் கேப் வழங்கப்பட்டு பெருமை படுத்த படுவர், அப்படி ஐபிஎல் தொடர்களில் அதிக முறை பர்பிள் கேப் பெற்றவர்,முதல் முறை பெற்றவர் உள்ளிட்ட முக்கிய விவரங்களை காண்போம்.
பர்பிள் கேப் விளக்கம் :
ஐபிஎல் தொடர் முதல் முறையாக 2008 ஆம் ஆண்டு தொடங்க பட்டதில் இருந்து அனைத்து அணிகளுக்கும் தலா ஒரு போட்டி முடிந்த பிறகு எந்த அணியின் பவுலர் சிறப்பான முறையில் பவுலிங் செய்து அதிக விக்கெட்டுகள் பெற்றுள்ளார் என்பதை பொறுத்து அவருக்கு பர்பிள் கேப் வழங்கப்படும், அதன்பின் ஒவ்வொரு போட்டி முடிவில் அதிக விக்கெட்டுகளை பெற்று பட்டியலில் முதல் இடத்தை பெறும் வீரருக்கு பர்பிள் கேப் மாறிக்கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் முறை பர்பிள் கேப் பெற்றவர் :
ஐபிஎல் தொடர் 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் நிலையில் முதல் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை பெற்று தொடரின் இறுதியில் முதல் முறையாக பர்பிள் கேப் பெற்ற பெருமைக்குரிய வீரர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த சோஹைல் தன்வீர் ஆவார். முதல் ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடிய சோஹைல் தன்வீர் 22 விக்கெட்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் பர்பிள் கேப் பெறுவதில் பதிவான சாதனை :
1) இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடரில் புவனேஷ்வர் குமார்(2016& 2017) மற்றும் டுவைன் பிராவோ (2013 & 2015) ஆகிய இருவரும் 2முறை பர்பிள் கேப் பெற்று அசத்தியுள்ளார்.
2) ஐபிஎல் தொடரில் முக்கிய சாதனையாக தொடர்ந்து 2 வருடங்கள் புவனேஷ்வர் குமார்(2016& 2017) பர்பிள் கேப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
3) இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் 2013 ஆம் ஆண்டு டுவைன் பிராவோ மற்றும் 2021 ஆம் ஆண்டு ஹர்ஷல் பட்டேல் ஆகிய இருவரும் ஒரு தொடரில் 32 விக்கெட்டுகள் பெற்று அதிக விக்கெட்டுகள் பெற்ற சாதனையை படைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
4) கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலர் சாஹல் 17 போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்களை பெற்று பர்பிள் கேப் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபில் தொடரில் பர்பிள் கேப் பெற்றவர்கள் பட்டியல் :
எண் |
பிளேயர் |
அணி |
வருடம் |
போட்டி |
விக்கெட்கள் |
எகானமி |
1 |
யுஸ்வேந்திர சாஹல் |
ராஜஸ்தான் ராயல்ஸ் |
2022 |
17 |
27 |
7.75 |
2 |
ஹர்ஷல் பட்டேல் |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் |
2021 |
15 |
32 |
8.14 |
3 |
ககிசோ ரபாடா |
டெல்லி கேபிடல்ஸ் |
2020 |
17 |
30 |
8.34 |
4 |
இம்ரான் தாஹிர் |
சென்னை சூப்பர் கிங்ஸ் |
2019 |
17 |
26 |
6.69 |
5 |
ஆண்ட்ரூ டை |
கிங்ஸ் XI பஞ்சாப் |
2018 |
14 |
24 |
8 |
6 |
புவனேஷ்வர் குமார் |
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் |
2017 |
14 |
26 |
7.05 |
7 |
புவனேஷ்வர் குமார் |
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் |
2016 |
17 |
23 |
7.42 |
8 |
டுவைன் பிராவோ |
சென்னை சூப்பர் கிங்ஸ் |
2015 |
17 |
26 |
8.14 |
9 |
மோஹித் ஷர்மா |
சென்னை சூப்பர் கிங்ஸ் |
2014 |
16 |
23 |
8.39 |
10 |
டுவைன் பிராவோ |
சென்னை சூப்பர் கிங்ஸ் |
2013 |
18 |
32 |
7.95 |
11 |
மோர்னே மோர்கல் |
டெல்லி டேர்டெவில்ஸ் |
2012 |
16 |
25 |
7.19 |
12 |
லசித் மலிங்கா |
மும்பை இந்தியன்ஸ் |
2011 |
16 |
28 |
5.95 |
13 |
பிரக்யான் ஓஜா |
டெக்கான் சார்ஜர்ஸ் |
2010 |
16 |
21 |
7.29 |
14 |
ஆர்.பி.சிங் |
டெக்கான் சார்ஜர்ஸ் |
2009 |
16 |
23 |
6.98 |
15 |
சோஹைல் தன்வீர் |
ராஜஸ்தான் ராயல்ஸ் |
2008 |
11 |
22 |
6.46 |