தவான் மற்றும் பிரப்சிம்ரன் சிங் அதிரடியில் ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர்கள் திணறல்..!! | ipl pbks vs rr live score

ஐபிஎல் 2023 தொடரின் 8 வது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலர்களை நாலா பக்கமாகும் சிதறடித்தார்கள், குறிப்பாக பஞ்சாப் அணி இளம் வீரர்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னணி பவுலர்களை துவம்சம் செய்தனர்.
ஐபிஎல் அரங்கில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்கள் பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஷிகர் தவான் அசத்தலான தொடக்கத்தை அளித்தார்கள். பஞ்சாப் அணியின் இளம் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலர்களை துவம்சம் செய்தார்.
பஞ்சாப் அணி இளம் வீரர் பிரப்சிம்ரன் சிங் ஐபில் தொடரில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார்.அதன்பின் பிரப்சிம்ரன் சிங் 60(34) ரன்கள் பதிவு செய்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் அவரது விக்கெட்டை கைப்பற்றி மிரட்டல் ஆட்டத்திற்கு முடிவு கட்டினார்.அடுத்து களமிறங்கிய ராஜபக்சேவுக்கு எதிர்பாராத விதமாக அடிபட்ட நிலையில் உடனடியாக ரீடயர் ஹார்ட் ஆகி பெவிலியன் திரும்பினார்.
பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை ஏற்றினார். அதன்பின் ராஜஸ்தான் அணியின் முன்னணி பவுலர் சாஹல் இளம் வீரர் ஜிதேஷ் சர்மா 27(16) பதிவு செய்து பெவிலியன் திரும்பினார். இறுதி வரை மிரட்டலாக விளையாடிய ஷிகர் தவான் ஆட்டமிழக்காமல் 86(56) ரன்கள் பதிவு செய்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 197 ரன்கள் பதிவு செய்து அசத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார், பஞ்சாப் அணியை அளித்த இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எப்படி பேட்டிங் செய்து பஞ்சாப் பவுலர்களை எதிர்கொள்ள போகிறார்கள் என்பதை காண்போம்.