ராஜஸ்தான் vs பஞ்சாப் அணிகள் மோதும் போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் அப்டேட்..!! | ipl pbks vs rr 2023 toss

ஐபிஎல் 2023 தொடரில் இன்றைய அதிரடி போட்டியாக சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஷிகர் தவான் தலைமையில் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள், இந்த போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் வெளியானது.
ஐபிஎல் அரங்கில் தினந்தோறும் அதிரடியான வகையில் போட்டிகள் நடைபெற்று வருகிறது, அந்த வரிசையில் இன்று ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த உள்ளார்கள். இந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் வெற்றியுடன் தொடங்கியுள்ள நிலையில், இன்று நடைபெற உள்ள 8 வது லீக் போட்டியில் கட்டாயம் இரு அணிகளும் வெற்றியை பெற முழுவீச்சில் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் அணிக்கு எதிராக ராஜஸ்தான் பவுலர் யுஸ்வேந்திர சாஹல் சிறந்த பவுலிங் ரெகார்டை வைத்துள்ளார். அதே சமயத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் லெக் ஸ்பின்னர்கள் இடம் மிகவும் தடுமாறி உள்ளார், எனவே பஞ்சாப் கிங்ஸ் அணி பவுலர் ராகுல் சாஹர் ஜோஸ் பட்லர் இடையில் நல்ல போட்டி நிலவும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஐபிஎல் அரங்கில் முக்கிய அதிரடி போட்டியாக சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஷிகர் தவானின் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி இருக்கும் என்பதில் ஐயமில்லை, இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்ய ஷிகர் தவான் தலைமையில் ஆன பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன் : யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன் ), தேவ்தத் படிக்கல், ஷிம்ரோன் ஹெட்மையர், ரியான் பராக், ஜேசன் ஹோல்டர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், கே.எம்.ஆசிப், யுஸ்வேந்திர சாஹல்.
பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன் : ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், பானுக ராஜபக்ச, ஜிதேஷ் சர்மா (வி.கீ), சிக்கந்தர் ராசா, ஷாருக் கான், சாம் குரான், நாதன் எல்லிஸ், ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.