த்ரில்லர் வெற்றி பெற்ற சென்னை அணி..! ஜடேஜாவின் அதிரடி ஆட்டத்தால் நடந்த அதிசயம்.. | IPL Final CSK Win

2023 ஆம் ஆண்டின் இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டியானது மார்ச் 31 அன்று தொடங்கி நேற்றைய தினம் அதாவது மே 29 ஆம் நாள் முடிவடைந்தது. இந்த ஆண்டில் சுவாரஸ்யம் என்னவென்றால், போட்டியின் முதல் ஆட்டத்தில் மோதிய அணிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் அணி ஆகும். அகமதாபாத்தில் நடந்த இந்தப் போட்டியில், குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதே போல, கடைசி போட்டியாக நேற்று நடந்த ஆட்டத்தில் மோதிய அணிகள், சிஎஸ்கே மற்றும் ஜிடி அணிகள் ஆகும். இந்தப் போட்டியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. கடைசி போட்டியான நேற்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸை வென்று முதலில் பௌலிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய குஜராத் அணியில் சஹா மற்றும் ஷுப்மன் கில் அதிரடி ஆட்டத்தை ஆடினர். இதில், சஹா 39 பந்துகளுக்கு 59 ரன்கள் டோனியால் விக்கெட் இழந்தார். கில் 20 பந்துகளுக்கு 39 ரன்கள் எடுத்துத் தந்தார். இதனைத் தொடர்ந்து, சாய் சுதர்சன் தனது அதிரடியான ஆட்டத்தால், 47 பந்துகளுக்கு 96 ரன்கள் எடுத்து குஜராத் அணி 214 ரன்கள் எடுக்க உதவியாக இருந்தார். அதன் படி, 20 ஓவரில் 4 விக்கெட்டுகளுடன் 214 ரன்கள் எடுத்தது குஜராத் அணி. குஜராத் அணி விளையாடி சமயத்தில் சிறிய தூரல்கள் இருந்தது.
இதனைத் தொடர்ந்து, சிஎஸ்கே களமிறங்கியது. சிஎஸ்கே பேட்டிங்கில் இன்னிங்ஸின் முதல் ஓவரின் மூன்றாவது பந்துக்குப் பிறகு, மைதானத்தில், பலத்த மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்த மழை நீண்ட நேரம் இல்லை என்றாலும், போட்டி நடைபெற்ற இடத்தில் சிக்கலான மற்றும் தாமதத்தை ஏற்படுத்தியதாக இருந்தது. இதன் காரணமாக, சிஎஸ்கே வின் பேட்டிங்கானது 15 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு, இலக்கானது 171 ஆக மாற்றப்பட்டது.
இறுதியில் போட்டி மீண்டும் தொடங்கியது. இதில், டெவோன், கான்வே, அஜிங்க்யா ரஹானே, ஷிவம் துபே, அம்பதி ராயுடு போன்றோரின் வெற்றிகள் சிஎஸ்கே அணிக்கு உதவியாக இருந்தது. இதில், கடைசி இரண்டு பந்துகளில் வெற்றி பெற 10 ரன்கள் தேவையாக இருந்தது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதத்தில் ரவீந்திர ஜடேஜா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர், இரண்டாவது கடைசி பந்தை சிக்ஸருக்கும், கடைசி பந்தை பவுண்டரிக்கும் அடித்து சிஎஸ்கேவை வெற்றி முனைப்பால் திகைக்க வைத்தார். இவ்வாறு சிஎஸ்கே அணி 171 ரன்களைப் பெற்று ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றியைத் தழுவியது.