ஐபிஎல் தொடரில் பதிவான அசத்தல் பேட்டிங் சாதனைகள் ஒரு பார்வை..!! | ipl all time batting records

இந்தியாவின் முக்கிய உள்நாட்டு தொடர்களில் ஒன்றான ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், இதுவரை ஐபிஎல் தொடரில் பதிவான அதிரடி பேட்டிங் ரெக்கார்டுகள் மற்றும் அதனை படைத்த முன்னணி வீரர்கள் பற்றி காண்போம்.
ஐபிஎல் 2023 ஆம் தொடர் வரும் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது, இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிந்து 70 லீக் போட்டிகளில் விளையாட உள்ளார்கள். இந்த லீக் சுற்றின் போட்டிகள் மே 21 ஆம் தேதி முடிவடைந்த பின்னர், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகளுக்கு நடுவில் போட்டிகள் நடைபெற்ற பின் தேர்வாகும் இரு அணிகள் இறுதி போட்டியில் வரும் மே 28 ஆம் தேதி விளையாட உள்ளது.
இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் பதிவான பேட்டிங் சாதனைகள் குறித்து ஒரு பார்வை :
புள்ளிவிவரங்கள் |
பிளேயர் |
ரெகார்ட் |
அணி |
தொடரில் அதிக ரன்கள் |
விராட் கோலி |
6624 |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் |
அதிக பவுண்டரிகள் |
ஷிகர் தவான் |
701 |
பஞ்சாப் கிங்ஸ் |
அதிக சிக்ஸர்கள் |
கிறிஸ் கெயில் |
357 |
பஞ்சாப் கிங்ஸ் (ஓய்வு பெற்று விட்டார் ) |
அதிக அரைசதம் |
டேவிட் வார்னர் |
54 |
டெல்லி கேபிட்டல்ஸ் |
அதிக சதம் |
கிறிஸ் கெயில் |
6 |
பஞ்சாப் கிங்ஸ் (ஓய்வு பெற்று விட்டார் ) |
வேகமாக பதிவு செய்த அரைசதம் |
கே.எல்.ராகுல் |
51(14) |
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் |
வேகமாக பதிவு செய்த சதம் |
கிறிஸ் கெயில் |
100(30) |
பஞ்சாப் கிங்ஸ் (ஓய்வு பெற்று விட்டார் ) |
ஒரு போட்டியில் அதிக ரன் |
கிறிஸ் கெயில் |
175*(66) |
பஞ்சாப் கிங்ஸ் (ஓய்வு பெற்று விட்டார் ) |
சிறந்த பேட்டிங் சராசரி |
கே.எல். ராகுல் |
48.01 |
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் |
சிறந்த பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் |
ஆண்ட்ரே ரசல் |
177.88 |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் |
ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் மார்ச் 31 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்த தொடரில் இடம்பெற்றுள்ள 10 அணிகளும் தங்கள் ஹாம் கிரவுண்டில் 7 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் 2023 ஆம் ஐபிஎல் தொடரில் பல அதிரடிகள் இடம்பெற வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த தொடரின் முதல் போட்டியில் கடந்த தொடரின் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.