ஐபிஎல் 2023 தொடரில் ஆர்சிபி வீரர் விராட் கோலி பதிவு செய்ய உள்ள சாதனைகள்.!! | ipl 2023 virat kohli upcoming records

ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் மிகவும் அதிரடியாக நடைபெற்று வரும் நிலையில், இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர் விராட் கோலி படைக்க உள்ள முக்கிய சாதனைகள் பற்றி காண்போம்.
ஐபிஎல் 2023 ஆம் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது,குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் பெங்களூரு அணி முன்னணி வீரர்கள் டூ பிளெசிஸ் மற்றும் விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐபிஎல் அரங்கை மிரட்டினார்கள் என்று கூறினால் மிகையில்லை.
இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை கட்டாயம் வெல்லும் நோக்கில் உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. அதற்கு வலு சேர்க்கும் வகையில் அணியின் முன்னணி வீரர் விராட் கோலி தனது அசத்தலான பார்மில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி இன்று ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ள கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பல சாதனைகளை படைக்க உள்ளார்.
1) ஐபிஎல் தொடரில் 2008 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக களமிறங்கிய விராட் கோலி, இன்று தனது 225 வது ஐபிஎல் போட்டியில் களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2) இன்று நடைபெறவுள்ள போட்டியில் 29 ரன்கள் பதிவு செய்தால் விராட் கோலி ஈடன் கார்டன் மைதானத்தில் 500 ரன்கள் பதிவு செய்வார்
3) விராட் கோலி டி20 தொடரில் இன்னும் 92 ரன்கள் பெற்றால் 11500 ரன்கள் பெற்ற வீரர் என்ற சாதனையை படைப்பார், இதில் ஐபிஎல் தொடரில் மற்றும் 6706 ரன்கள் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
4) ஐபிஎல் தொடரில் தனித்துவமான சாதனையாக விராட் கோலி இன்னும் 6 கேட்ச் பிடித்தால் 100 கேட்ச் பிடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார்.
விராட் கோலி அண்மையில் முடிந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அரை சதம் பதிவு செய்த நிலையில், ஐபிஎல் தொடரில் 50 அரைசதங்கள் பதிவு செய்த முதல் இந்திய வீரர் என்ற முக்கிய சாதனை படைத்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.