ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ள அணிகளின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் பட்டியல்..!! | ipl 2023 captain and coach list

இந்தியாவின் முக்கிய டி20 தொடர் ஆன ஐபிஎல் தொடருக்கு மிகப்பெரிய அளவில் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் மிக விரைவில் ஆரம்பிக்க உள்ள நிலையில், இதில் பங்கேற்கும் அணிகள் குறித்த சில முக்கிய தகவல்களை காண்போம்.
கிரிக்கெட் விளையாட்டில் சமீப காலத்தில் குறைந்த ஓவர்கள் தொடருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது, முக்கியமாக டி20 தொடர்களில் மிகவும் பிரபலமான தொடர் ஆன ஐபிஎல் தொடருக்கு என்று உலக அளவில் வரவேற்பு உள்ளதால் தொடர்ந்து 15 ஆண்டுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த 2023 ஆண்டிற்கான 16 வது ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ள நிலையில், அந்த அணிகளின் கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்கள் குறித்து பார்ப்போம்.
எண் |
அணி |
கேப்டன் |
பயிற்சியாளர் |
1 |
சென்னை சூப்பர் கிங்ஸ் |
எம்.எஸ்.தோனி |
ஸ்டீபன் பிளெமிங் |
2 |
மும்பை இந்தியன்ஸ் |
ரோஹித் சர்மா |
மார்க் பவுச்சர் |
3 |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் |
பாப் டூ பிளெசிஸ்
|
சஞ்சய் பங்கர் |
4 |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் |
நிதிஷ் ராணா |
சந்திரகாந்த் பண்டிட் |
5 |
டெல்லி கேப்பிட்டல்ஸ் |
டேவிட் வார்னர் |
ரிக்கி பாண்டிங் |
6 |
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் |
ஐடன் மார்க்ராம்
|
பிரையன் லாரா
|
7 |
குஜராத் டைட்டன்ஸ் |
ஹர்திக் பாண்டியா |
ஆஷிஷ் நெஹ்ரா |
8 |
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் |
கே.எல் ராகுல் |
ஆண்டி பிளவர் |
9 |
ராஜஸ்தான் ராயல்ஸ் |
சஞ்சு சாம்சன் |
குமார் சங்கக்கார |
10 |
பஞ்சாப் கிங்ஸ் |
ஷிகர் தவான் |
டிரெவர் பெய்லிஸ் |
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ள 10 அணிகளும் சிறந்த கேப்டன் மற்றும் சிறந்த பயிற்சியாளர் தலைமையில் விளையாட உள்ளதால், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைத்து அணிகளும் சாம்பியன் பட்டத்தை வெல்ல முழுவீச்சில் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.