IPL 2023 : ஏலத்தில் என்ன நடக்கப் போகுதோ..? த்ரிலிங்கா இருக்கு.. எதிர்பார்ப்பில் சாம் கர்ரன்!!

சாம் கர்ரனின் பெயர் சந்தேகத்திற்கு இடமின்றி ஐபிஎல் மினி ஏலத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெயர்களில் ஒன்றாக இருக்கிறது. மேலும் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கர்ரன் பெரும் தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாம் கர்ரனை வாங்குவதற்கு பல்வேறு அணிகளும் தீவிரம் காட்டி வரும் நிலையில், அவர் நாளை நடக்கும் ஐபிஎல் ஏலத்தில் ஒரு நல்ல ஒப்பந்தத்தைப் பெறுவேன் என்று நம்புகிறார். ஆனால் பென் ஸ்டோக்ஸ் மற்றும் இன்னும் சிலரும் உள்ளதால், அது தனது வாய்ப்புகளை பாதிக்கக்கூடும் என்று கூறினார்.
ஐபிஎல் ஏலம் கொச்சியில் நாளை நடக்க உள்ளது. இதில் சாம் கர்ரன் மட்டுமல்லாது ஸ்டோக்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன் போன்ற ஆல்-ரவுண்டர்களை பல அணிகள் பெரிய தொகையை கொடுத்து ஏலம் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்.
கர்ரனின் அடிப்படை விலை ரூ. 2 கோடியாக உள்ள நிலையில், ஏலத்தில் தனது வருவாயைப் பெருக்க முடியும் என கூறியுள்ள அவர், தொலைக்காட்சியில் இந்த ஏலத்தை பார்க்க ஆர்வத்துடன் இருப்பதாகக் கூறினார்.
சாம் கர்ரன் இதற்கு முன்பு அதிகபட்சமாக ரூ.7.2 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முழு பார்மில் இருப்பதால், அதைவிட அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவாரா என்று அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் ஏலத்தை எதிர்நோக்கியுள்ளனர்.