ஐ.பி.எல் 2023: இந்த முறை கப்பு அடிச்சே ஆகணும்.. முக்கிய வீரர்களை குறிவைக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்!!

IPL 2023 : ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை பெறாத ஒரு அணிக்கு அளவுகடந்த ரசிகர்கள் பட்டாளம் உண்டு என்றால் அது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு தான். பெங்களூர் அணி ஐ.பி.எல் தொடரில் பலமுறை லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய போதிலும் முக்கிய போட்டியில் தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறி உள்ளது.
கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல் தொடரில் பெங்களூர் அணியின் கேப்டன் பதிவிலிருந்து விலகிய விராட் கோலிக்கு பதிலாக ஃபாஃப் டு பிளெசிஸ் கேப்டனாக அறிமுகமாகி சிறப்பாக அணியை வழிநடத்தினார். இந்நிலையில் பெங்களூர் அணி லீக் சுற்றில் 14 போட்டிகளில் 8-ல் வெற்றி பெற்று எலிமினேட்டர் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.
பெங்களூர் அணி கடந்த ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடிய நிலையில், இந்த ஆண்டு நடக்கவிருக்கும் மினி ஏலத்தில் கலந்துகொள்ளும் முன்னர் அணியிலிருந்து வெறும் 4-வீரர்களை மட்டும் விடுவித்து. மற்ற வீரர்களை தக்க வைத்துள்ளது .பெங்களூர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள் ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், லுவ்னித் சிசோடியா, அனீஸ்வர் கவுதம் மற்றும் சாமா மிலிந்த் ஆகியோர் ஆவர்.
மேலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேடிங் மூலம் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்பை 75-லட்சத்திற்கு பெங்களூர் அணி கொடுத்துள்ளது.
ஐ.பி.எல் தொடரின் 16வது சீசன் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ள நிலையில், கொச்சியில் டிசம்பர் -23 ஆம் தேதி நடக்கும் மினி ஏலத்தில் பெங்களூர் அணி வெறும் 8.75 கோடியோடு பங்கேற்கவுள்ளது. மேலும் பெங்களூர் அணி தங்களிடம் உள்ள தொகையை வைத்து தங்கள் அணிக்காக வாங்க மூன்று வீரர்களை முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது.
1.அதிரடி தொடக்க வீரர்:
பெங்களூர் அணியில் கேப்டன் டு பிளெசிஸ் தொடக்க வீரராக களமிறங்கிய சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். அவருடன் சேர்ந்து களமிறங்க மேலும் ஒரு தொடக்க வீரர் அணியில் இல்லை. அந்த இடத்தில் கடந்த ஆண்டு விளையாடிய கோலியும் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் ஒரு புதிய முன்னனி தொடக்க வீரரை வாங்க அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில் ஏலத்தில் பங்கேற்கும் இந்திய வீரர் மயங்க அகர்வாலை வாங்க அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தெரிய வருகிறது. மேலும் மயங்க் அகர்வால் ஒரு சிறந்த தொடக்க ஆட்டக்காரர். தனது அதிரடியான ஆட்டத்தால் அணிக்கு பக்கபலமாக இருப்பார். இதனால் பெங்களூர் அணி ஏலத்தில் இவரை வாங்க முனைப்பில் உள்ளனர். மேலும் இவர் மினி ஏலத்தில் தனது அடிப்படை விலையாக 1 கோடி ரூபாயை நியமித்துள்ளார்.
மயங்க் அகர்வால் இதுவரை ஐ.பி.எல் தொடரில்
போட்டிகள் |
113 |
ரன்கள் |
2331 |
அதிக ரன் |
106 |
ஸ்ட்ரைக் ரேட் |
134.51 |
2.சிறந்த பௌலிங் ஆல்ரவுண்டர் :
பெங்களூர் அணி கடந்த ஆண்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி எலிமினேட்டர் சுற்று வரை சென்றதற்கு முக்கிய பங்கு அணியின் பௌலர்களையும் சேரும். குறிப்பாக வனிந்து ஹசரங்க மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஜோடி இருவரும் சிறப்பாக பௌலிங் செய்து அணிக்கு பல தருணங்களில் வெற்றியை பெற்றுத் தந்துள்ளனர்.
மேலும் அணியில் இவர்களுக்கு உதவியாக ஒரு பௌலிங் ஆல்ரவுண்டரை வாங்க அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தெரிய வருகிறது. அதுவும் இங்கிலாந்து அணியின் பௌலிங் ஆல்ரௌண்டரான சாம் கர்ரன் மீது இவர்கள் கவனம் திரும்பியுள்ளது. சாம் கர்ரன் தனது சிறப்பான பௌலிங்கால் அணிக்கு முக்கிய தருணங்களில் விக்கெட்டை பெற்று தருவார்.
மேலும் அதிரடியாக பேட்டிங்கும் செய்வார். இதனால் இவர் அணிக்கு நல்ல விதத்தில் உதவுவார் என்று பெங்களூர் அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது. சாம் வரும் ஏலத்தில் தனது அடிப்படை விலையாக 2 கோடி ரூபாயை நியமித்துள்ளார்.
2022-ஆம் ஆண்டில் சாம் கர்ரனின் டி-20 போட்டிகள் குறிப்பு:
போட்டிகள் |
19 |
விக்கெட்கள் |
25 |
எகானமி |
7.56 |
ரன்கள் |
67 |
ஸ்ட்ரைக் ரேட் |
104.68 |
3.நேர்த்தியான ஸ்பின் பௌலர்:
பெங்களூர் அணியில் ஸ்பின் பௌலிங்கில் அசத்தி வருகிறார் வனிந்து ஹசரங்க. இவர் தனது நேர்த்தியான பௌலிங்கால் முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை பெற்று அணியின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளார்.
மேலும் ஒரு ஸ்பின் பௌலரை வாங்கினால் இவர்கள் இருவரும் இணைந்து நல்ல பௌலிங் டீமாக செயல்படுவார்கள் என்று எண்ணிய அணி நிர்வாகம் இந்திய ஸ்பின்னர் ஷ்ரேயாஸ் கோபாலை வாங்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இவரது பௌலிங்கில் பல முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
எனவே அணிக்கு நல்ல வகையில் உதவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏலத்தில் இவரது அடிப்படை விலை 50 லட்சம் ஆகும் .
ஷ்ரேயாஸ் கோபால் - இதுவரை ஐ.பி.எல் தொடரில்
போட்டிகள் |
49 |
விக்கெட்கள் |
49 |
எகானமி |
8.1 |
இந்த முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கண்டிப்பாக சிறப்பான பங்களிப்பை அளித்து ஐ.பி.எல் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று பெங்களூர் அணியின் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.