ஐபிஎல் 2023 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் களமிறங்க உள்ள புதிய வீரர்கள்..!! | ipl 2023 rcb replacement players

ஐபிஎல் 2023 ஆம் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்து காயம் காரணமாக சில முன்னணி வீரர்கள் விலகி உள்ள நிலையில், மீதம் உள்ள தொடரில் பங்கேற்க புதிய வீரர்களை அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் அரங்கில் அதிரடி வீரர் பாப் டு பிளெசிஸ் தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களமிறங்கி விளையாடி வருகிறது, இந்த ஐபிஎல் 2023 தொடரில் சாம்பியன் பட்டத்தை கட்டாயம் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருப்பது பெங்களூர் அணியின் முதல் போட்டியில் வெளிப்படுத்திய மிரட்டல் ஆட்டத்தில் இருந்து தெளிவாக தெரிகிறது.
அதே சமயத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்து காயம் காரணமாக பேட்ஸ்மேன் ரஜத் படித்தார் மற்றும் பவுலர் ரீஸ் டோப்லி ஆகியோர் முழுமையாக ஐபிஎல் 2023 தொடரில் இருந்து விலகியுள்ளது அணிக்கு மிகுந்த பின்னடைவை அளித்தால், அணி நிர்வாகம் சார்பில் போட்டிகளில் விளையாட புதிய வீரர்கள் ஒப்பந்தம் ஆகி உள்ளார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் 2023 ஆம் தொடரில் மீதம் உள்ள போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சார்பில் விளையாட தென் ஆப்பிரிக்கா வீரர் வெய்ன் பார்னெல் 75 லட்சம் ரூபாவிற்கும் மற்றும் கர்நாடக வீரர் வைஷாக் விஜயகுமார் 20 லட்சம் ரூபாவிற்கும் ஒப்பந்தம் ஆகி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.