ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் களமிறங்க உள்ள இங்கிலாந்து ஆல்ரவுண்டர்.?? | ipl 2023 rcb reece topley replacement

ஐபிஎல் 2023 தொடரை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியுடன் தொடங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்து காயம் காரணமாக விலகிய வேகப்பந்து பவுலர் ரீஸ் டோப்லி இடத்தை நிரப்ப முன்னணி இங்கிலாந்து ஆல்ரவுண்டர் அணியில் இடம்பெற உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2023 ஆம் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் விளையாடிய தனது முதல் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது, இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய வேகப்பந்து பவுலர் ரீஸ் டோப்லி 2 ஓவர்கள் 14 ரன்கள் பெற்று வீசி 1 விக்கெட் அணிக்கு பக்கபலமாக இருந்தார்.
அதன்பின் போட்டியில் விளையாடி கொண்டிருந்த போது ரீஸ் டோப்லிவிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்ட நிலையில் பாதியில் போட்டியில் இருந்து விலகினார். இந்நிலையில் இன்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் புதிய வீரராக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐபிஎல் 2023 ஆம் தொடரின் முதல் போட்டியில் வெளிப்படுத்திய அதிரடி ஆட்டத்தின் மூலம் தொடரில் இடம்பெற்றுள்ள அனைத்து அணிகளுக்கும் தனது நிலையை தெளிவாக உணர்த்தி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பிளேயிங் லெவன் (தோராயமான) : பாப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், மைக்கேல் பிரேஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக்(வி.கீ), டேவிட் வில்லி, ஹர்ஷல் பட்டேல், கர்ண் சர்மா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.