DC vs RR ipl 2023 1st innings highlights | ஆரம்பத்தில் அதிரடி காட்டி.. இறுதியில் சொதப்பிய ராஜஸ்தான்.. வெற்று பெறுமா?

ஐபிஎல் 2023 தொடரின் 11வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து டெல்லி கேபிடல்ஸ் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, ஜெய்ஸ்வால் - ஜோஸ் பட்லரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். டெல்லி அணி தரப்பில் முதல் ஓவரை இடதுகை வேகப்பந்து வீச்சாளரான கலீல் அஹ்மத் வீச, 5 பவுண்டரிகளை விளாசி ஜெய்ஸ்வால் அதிரடியாக தொடங்கினார்.
பின்னர், 2வது ஓவரை வீசிய நார்கியே பந்துவீச்சில் ஜோஸ் பட்லர் 3 பவுண்டரிகளை விளாசினார். ஒவ்வொரு ஓவரிலும் ஒரு ரன் எடுப்பதற்கு பதிலாக, ஒரு பவுண்டரியை விளாசியதால் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் அதிகரித்துக் கொண்டே போனது. தொடர்ந்து விளையாடிய ஜெய்ஸ்வால் 25 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். ஐபிஎல் தொடரில் ஜெய்ஸ்வால் அடிக்கும் 5வது அரைசதம் இதுவாகும்.
தொடர்ந்து அவர் 31 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம், ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 9 ஓவர்கள் முடிவில் 98 ரன்கள் குவித்திருந்தது. இவரை தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 0 (4), குல்தீப் யாதவ் வீசிய பந்தில் சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார்.
பின்னர் ரோவ்மன் பவல் பந்துவீச்சில் இளம் வீரர் ரியான் பராக்கும் 11 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதற்கிடையில், ராஜஸ்தான் அணி 25 பந்துகளாக எந்த பவுண்டரியையும் அடிக்கவில்லை. 9 ஓவர்களிலேயே சுமார் 100 ரன்களை எட்டிய ராஜஸ்தான் அணி, 16 ஓவர்கள் முடிவில் 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர், பட்லர் மற்றும் ஹெட்மையர் இருவரும் தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்கள். இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. இதன் மூலம் டெல்லி அணிக்கு 200 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.