IPL 2023 PBKS vs SRH 1st Innings Highlights | ஷிகர் தவானின் மிரட்டல் பேட்டிங்.. ஹைதரபாத் வெற்றிக்கு டார்கெட் இதுதான்..

ஐபிஎல் 2023 தொடரின் 14வது லீக் போட்டியில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து, தவான் மற்றும் பிரப்சிம்ரன் சிங் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் முதல் ஓவரை வலதுகை வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் வீச, முதல் பந்திலேயே பிரப்சிம்ரன் சிங் 0(1) அவுட் ஆகி வெளியேறினார்.
பின்னர், 2வது ஓவரை வீசிய மார்கோ ஜான்சன் பந்துவீச்சில் மேத்யூ ஷார்ட் 1(2) ஆட்டமிழக்க, களத்துக்கு வந்த சாம் கரன் 4வது ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். இங்கேயே பஞ்சாப் அணி தடுமாற தொடங்கியது. பவர்ப்ளே முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 43 ரன்கள் சேர்த்து இருந்தது. இம்பேக் ப்ளேயராக பஞ்சாப் அணியின் சார்பில் ரஸா களமிறக்கப்பட்டு அவரும் ஏமாற்ற, அணியின் கேப்டன் ஷிகர் தவான் மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 42 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
மேலும், தனது அணிக்கு ஷிகர் தவான் 99(66) ரன்களையும் குவித்துக் கொடுத்தார். இதில் 12 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடங்கும். பின்னர் அடுத்தடுத்த களம்கண்ட வீரர்களும் சொதப்ப இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 144 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.