சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த இளம் வீரர்கள்..!! தோனி போட்ட ஸ்கெட்ச்..!! | csk ipl 2023 news

ஐபிஎல் 2023 தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை பெற்று அசத்தி வரும் அணிகளில் முன்னணி அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளங்குகிறது, குறிப்பாக மிரட்டல் பேட்டிங்கை வெளிப்படுத்தி ஐபிஎல் அரங்கை அதிர வைக்கும் சென்னை அணிக்கு வலு சேர்க்கும் வகையில் இளம் வெளிநாட்டு பவுலர்கள் அணியில் இணைந்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமையில் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை பெற்று வருகிறது, ஐபில் 2023 ஆம் அரங்கில் ஒரு அதிரடி பேட்டிங் யூனிட்டை கொண்டுள்ள அணியாக சென்னை அணி விளங்குகிறது என்று கூறினால் மிகையில்லை. அதே சமயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவுலிங்கில் சற்று தடுமாறி தான் வருகிறது.
அதாவது சென்னை அணியில் லக்னோ அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் வேகப்பந்து பவுலர்கள் மிகவும் மோசமான பவுலிங்கை வெளிப்படுத்தினார்கள், குறிப்பாக தேவை இல்லாத எக்ஸ்ட்ரா ரன்களை வாரி வழங்கினார்கள். அதன்பின் கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் சென்னை பவுலர்கள் தங்கள் தவறுகளை சரி செய்து நல்ல பவுலிங்கை வெளிப்படுத்தினார்கள்.
இந்நிலையில் சென்னை அணியின் பவுலிங் யூனிட்டை வலுப்படுத்தும் வகையில் இலங்கை அணி வீரர்கள் மஹேஷ் தீக்ஷனா, மதீஷ் பத்திரன இருவரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார்கள், எனவே சென்னை அணியின் பவுலிங் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து விட்டதாக ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக இணையத்தில் பதிவு விட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த ஆண்டு சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தினார் ஸ்பின்னர் மஹேஷ் தீக்ஷனா, அதே சமயத்தில் மிரட்டல் வேகப்பந்து பவுலிங்கை வெளிப்படுத்தும் இளம் வேகப்பந்து பவுலர் மதீஷ் பத்திரன அணியில் இணைத்துள்ளது சென்னை அணியின் பவுலிங் தடுமாற்றத்திற்கு முடிவு கட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.